திடீர் சின்னம்மா.. திஹார் தினகரன்.. என்னாது இது.. அடடா, தீபா டென்ஷனாயிட்டாரே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திடீர் உப்புமா, சாம்பார் மாதிரி திடீர் சின்னம்மா மற்றும் திகார் தினகரன் மாதிரி ஆட்கள் அ.தி.மு.க.விற்கு சொந்தம் கொண்டாடுவது எள்ளளவும் ஏற்புடையது அல்ல என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா கூறியுள்ளார். நான்தான் உண்மையான வாரிசு, என்னால்தான் அதிமுக கட்டிக்காக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தீபா கடும் கொந்தளிப்புடன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

புரட்சித்தலைவர், மற்றும் புரட்சித்தலைவியால் கட்டிக் காத்திட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்று துரோக கும்பலின் பிடியில் சிக்கி சீர்கெட்டு வரும் நிலை மிக மிக வேதனைக்குரியது.

துரோக கும்பலின் தலைவி சிறையிலிருந்தும் திருந்தாத வன்மம் கொண்ட சசிகலாவின் வழிகாட்டுதலில் துரோக வம்சத்தின் பினாமி வாரிசான திகார் சிறையிலிருந்து வெளி வந்து கொட்டம் அடிக்க துடிக்கும் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வை நாங்களே இயக்குவோம் என்பது அடிமை கூடாரத்தின் மக்குச் சாமிகளாய் செயல்படும் எம்.எல்.ஏ.க்களில் சிலரை தன் வசமாக்கியதன் மூலம் கட்சியும், ஆட்சியும் எங்கள் வசமே என்று வெட்டி வீராப்பு பேசுவது பெரும் நகைச்சுவைக்குரியதும், கேளிக்குரியதுமாகும்.

திடீர் சின்னம்மா

திடீர் சின்னம்மா

திடீர் உப்புமா, சாம்பார் மாதிரி திடீர் சின்னம்மா மற்றும் திகார் தினகரன் மாதிரி ஆட்கள் அ.தி.மு.க.விற்கு சொந்தம் கொண்டாடுவது எள்ளளவும் ஏற்புடையது அல்ல.

தினகரன் யார்

தினகரன் யார்

யார் இந்த தினகரன்? கடைக்கோடித் தொண்டனுக்கும் பரிவுடன் வாழ்வளித்திட்ட புரட்சித் தலைவி அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டு நம்பிக்கைகுரியவராய் மாநிலங்களவை உறுப்பினர், கட்சியின் பொருளாளர் என்று தேர்வுச் செய்யப்பட்டவரே இந்த தினகரன்.

துரோகி பட்டியல்

துரோகி பட்டியல்

கழகத்தை வழிநடத்திய புரட்சித்தலைவி அம்மா தினகரனை துரோகி என்று இனம் கண்டு பகிரங்கமாக கண்டித்து அடிப்படை உறுப்பினராகக் கூட இருக்க தகுதியற்ற நபராக நீக்கிவைத்தார். அன்று முதல் வெளித்தெரியா வாழ்வு கண்ட நபரே இந்த தினகரன்.

தொடர்ந்து முகத்திரை கிழிப்பின் வக்கற்ற தன்மைக்கான பழி வாங்கலாகவே உடனிருந்தே குழிப்பறிக்கும் சசிகலா மற்றும் தினகரன் உள்ளிட்ட துரோக கும்பலால் தான் புரட்சித்தலைவி அம்மாவுக்கு நேர்ந்த மரணத்தின் மர்மம் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களால் முன் வைக்கப்படும் பகிரங்க குற்றச்சாட்டாகும்.

சதிகார கும்பல்

சதிகார கும்பல்

இந்த குற்றச்சாட்டுக்களுக்கு எல்லாம் தீர்வு வராத நிலையில் சதிகார கும்பல் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைப்பது பொது மக்களுக்கும், தொண்டர்களுக்கும் பொறுத்துக் கொள்ள முடியாத கோபத்தையும், ஆத்திரத்தையும் மூட்டியுள்ளது.

நாலாந்தர பேச்சாளர்கள்

நாலாந்தர பேச்சாளர்கள்

இந்நிலையில் நாலாந்தரப் பேச்சாளர்களை கை கூலிகளாக வைத்துக்கொண்டு கூவத்தூரில் கொட்டம் அடித்த சில கோமாளிகளை குதிரை பேரம் பேசி ஆட்சி தனது கையில் என்று பல ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக திகார் தினகரன் டெல்லியை மிரட்டுகிறாரா? தொண்டர்களை ஏமாற்றுகிறாரா? என்பது அவருக்கே வெளிச்சம்.

திஹார் தினகரன்

திஹார் தினகரன்

அதிமுக என்பது எக்கு கோட்டை. வத்தலகுண்டு ஆறுமுகம், பூலாவாரி சுகுமாறன் சிந்திய ரத்தத்தால் உருவாக்கப்பட்ட இயக்கத்தை அதிமுகவுக்கு சம்பந்தமே இல்லாத சகுனி சசிகலா, திஹார் தினகரன் போன்றோர்களால் அதிமுகவை ஓருபோதும் வீழ்த்திட முடியாது.

உண்மையான வாரிசு

உண்மையான வாரிசு

அம்மாவின் உண்மை வாரிசான என்னால் தான் இக்கழகம் கட்டிகாக்கப்படும். எனது அத்தை எனக்கு ஊட்டி வளர்த்திட்ட தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டு இக்கழகத்தை மீட்டு கட்டி காப்பதே எனது லட்சியம்.

உண்மையான அதிமுக தொண்டர்களின் லட்சியமும் அதுவே. லட்சியம் நிறைவேறும். அந்நாளில் துரோக கும்பலின் கொட்டம், அடக்கப்பட்டிருக்கும், வீழ்த்தப்பட்டிருக்கும் என்பதனை எச்சரிக்கையுடன் தெரிவிக்கிறேன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Deepa has slammed TTV Dinakaran and Sasikala for their attitude in the ADMK.
Please Wait while comments are loading...