சென்னை தி.நகர் சுரங்க பாதையில் சிக்கிய பஸ்.. பாலத்தில் லேசான விரிசலுக்கு பிறகு பத்திரமாக மீட்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் சுரங்க பாதையில் பேருந்து சிக்கியதால் பரபரப்பு- வீடியோ

  சென்னை: சென்னை தி நகரில் உள்ள துரைசாமி சுரங்க பாதையில் சொகுசு பேருந்து சிக்கி பாலத்தில் லேசாக விரிசல் ஏற்பட்ட நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டது.

  தி.நகரில் உள்ள சுரங்க பாதையில் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மாம்பாலம் நோக்கி சென்ற அந்த தனியார் பேருந்து திடீரென சிக்கிக் கொண்டது.

  பகல் நேரத்தில் தனியார் பேருந்துகள் நுழைய கூடாது என்ற விதியையும் மீறி அந்த பேருந்து நுழைந்ததால் தற்போது அதை எடுப்பதில் பிரச்சினை எழுந்துள்ளது.

  பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்

  பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்

  அந்த பேருந்தில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்டோர் இறக்கி விடப்பட்டனர். இதையடுத்து அந்த பேருந்தை எடுக்கும் முயற்சி நடைபெற்றது.

  முன்னோக்கி..

  முன்னோக்கி..

  இதையடுத்து பேருந்தை பின்னோக்கி அல்லது முன்னோக்கி இயக்க டிரைவர் முயற்சித்தார். ஆனால் பேருந்தின் மேற்கூரையின் உயரம் அதிகமாக இருப்பதால் அது வசமாக சிக்கிக் கொண்டது. இதனால் முன்னுக்கோ பின்னுக்கோ பேருந்தை இயக்கும்போது பாலத்தில் விரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது.

  பஸ் சிக்கியதால்...

  பஸ் சிக்கியதால்...

  தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமான சுரங்க பாதை என்பதால் அங்கு பஸ் சிக்கியதில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அலுவலகம் முடித்துவிட்டு வீடு திரும்புவோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

  அணிவகுப்பு

  அணிவகுப்பு

  மேற்கு மாம்பலத்திலிருந்து தி.நகர் செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இந்நிலையில் தீயணைப்பு வாகனம் வருவதற்குள் பஸ்ஸை போக்குவரத்து போலீஸார் பத்திரமாக மீட்டனர். விதிமுறைகளை மீறி இதுபோன்ற பேருந்து எப்படி நகருக்குள் வந்தது என்பது தொடர்பான விசாரணையில் போலீஸார் ஈடுபடவுள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Deluxe bus trapped in Duraisamy subway, T.Nagar, Chennai. If the driver operates the bus, then bridge begins to crack, so traffic jam in that place.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற