மழை அதிகமாக பெய்துல்லா, அதான் டெங்கு அதிகமாகிடுச்சி.. செல்லூர் ராஜூ 'அதிரடி' விளக்கம்
பருவமழை அதிகமாக பெய்வதாலேயே டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை: பருவமழை அதிகமாக பெய்வதாலேயே டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை டெங்கு காய்ச்சல் பாடாய் படுத்தி வருகிறது. நாள்தோறும் அதிகரிக்கும் உயிரிழப்புகளால் மக்கள் மரண பீதியில் உள்ளனர்.
சாதாரணமாக காய்ச்சல் வந்தால் கூட டெங்கு காய்சசலோ என்ற பீதி மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. டெங்கு காய்ச்சலின் தாக்கத்தால் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன.

டெங்குவுக்கு காரணம் மழை
இந்நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு மழைதான் காரணம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பருவ மழை அதிகமாக பெய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதிக மழையால் டெங்கு
மழை அதிகமாக பெய்துள்ளதாலேயே டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் டெங்குவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

சாணம் தெளித்தால்
தெர்மாகோள் திட்டத்திற்கு பிறகு அவரது ஒவ்வொரு கருத்தும் கிண்டலாகவே பார்க்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு காய்ச்சல் வராது என கூறியிருந்தார்.

சோஷியல் மீடியாக்களில் பிரபலம்
இந்நிலையில் பருவமழை அதிகம் பெய்ததாலே டெங்கு அதிகமாக பரவுகிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் கிண்டலாக பேசப்பட்டு வருகிறது.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications