லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை- தமிழகம் முழுவதும் இன்று மழை பெய்யும்
சென்னை: லட்சத்தீவு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டில் பெரும்பாலாந இடங்களில் மழை பெய்யும் என்றும் ஊட்டி, கோவை, வால்பாறை, தேனி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டை வடகிழக்கு பருவமழை புரட்டிப் போட்டு வருகிறது. கடந்த வாரம் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெரும் கனமழை பெய்தது. இதனால் சென்னை, கடலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இந் நிலையில் சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்,
வங்கக்கடலில் தெற்கு ஆந்திராவை ஓட்டி நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மறைந்து விட்டது. உள் மாவட்டங்களில் நிலவிய மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் 14 செ.மீ. மழை பெய்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இன்று(வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்யும். கோவை, ஊட்டி, வால்பாறை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையை எதிர்பார்க்கலாம்.
தற்போது லட்சத்தீவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடலில் உள்ளது. அரபிக்கடலில் இந்த நிகழ்வு இருந்த போதிலும் வங்கக்கடலில் உள்ள ஈரக்காற்றை தமிழகம் ஊடாக உள் வாங்கும். அதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய மழை 44 செ.மீ. ஆனால் 39.3 செ.மீ. மழை இப்போதே பெய்துவிட்டது. இந்த ஆண்டு சராசரியாக பெய்யக்கூடிய மழையைவிட சற்று கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு விவரம்:
சங்கரன்கோவில் 14 செ.மீ
ராஜபாளையம் 13 செ.மீ
ராதாபுரம், பாளையங்கோட்டை, ஆயிக்குடி தலா 10 செ.மீ
உத்தமபாளையம், கூடலூர் தலா 9 செ.மீ
குளச்சல், பேச்சிப்பாறை, சிவகிரி, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர் தலா 6 செ.மீ
நாகர்கோவில், மைலாடி, பேரையூர், வத்திராயிருப்பு, பூதப்பாண்டி, வாடிப்பட்டி தலா 5 செ.மீ.
செங்கோட்டை, கன்னியாகுமரி, தக்கலை, வால்பாறை தலா 4 செ.மீ.
போடிநாயக்கனூர், சிவகாசி, சாத்தான்குளம், மரக்காணம், திருவள்ளூர் தலா 3 செ.மீ.
பூந்தமல்லி, கொடைக்கானல், பாபநாசம், குழித்துறை, வானூர், இரணியல், தூத்துக்குடி தலா 2 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications