தனுஷின் சான்றிதழ்கள், அங்க அடையாளங்களில் பெரும் குழப்பம்... அன்றே சொன்னது ஒன்இந்தியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் தனுஷ் யாருடைய மகன்? கஸ்தூரி ராஜா - விஜயலட்சுமியின் மகனா அல்லது வழக்குப் போட்டிருக்கும் கதிரேசன் - மீனாட்சி மகனா? ஆரம்பத்தில் இந்த வழக்கை வேடிக்கையாகத்தான் மீடியா உள்ளிட்ட அனைத்துத் தரப்பும் பார்த்தது.

ஆனால் மீனாட்சி - கதிரேசனின் பிடிவாதம், கஸ்தூரி ராஜா தரப்பில் நிலவிய குழப்பமான அமைதி, சந்தேகத்தைக் கிளப்பியது.

 Dhanush case: Kasturi Raja in trouble

இப்போது இந்த வழக்கு கதிரேசன் - மீனாட்சி தம்பதிகளுக்கு சாதகமாகத் திரும்பும் நிலை உருவாகியுள்ளது. காரணம், இன்று வெளியாகியுள்ள மதுரை அரசு மருத்துவ அறிக்கையில், "தனுஷின் அங்க அடையாளங்களை லேசர் முறையில் அழித்திருப்பதாக" கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அவரது பிறப்பு மற்றும் பெயர் மாற்றச் சான்றிதழ்களில் ஏகக் குழப்பம் நிலவியது. இதை தனுஷிடம் தனியாக நீதிபதி விசாரித்தார் நீதிபதி. விசாரணை முடிந்து வெளியில் வந்த தனுஷ் முகத்தில் ஏக கவலை தெரிந்தது. தனுஷின் அம்மா விஜயலட்சுமி சோகம் தாங்கிய முகத்துடன் மகனை அழைத்துச் சென்றார்.

இன்று அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக வந்துள்ள அறிக்கை கஸ்தூரிராஜா தரப்பை ஆட்டங்காண வைத்திருக்கிறது.

தொடர்புடைய ஒன்இந்தியாவின் முந்தைய ரிப்போர்ட்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Dhanush case, Kasturi Raja - Vijayalakshmi side seems like losing hope due to confusions in the actor's identification marks and certificates.
Please Wait while comments are loading...