எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் 10 பேருடன் ஆளுநரை சந்தித்தார் தினகரன்
கருணாஸ் உட்பட 3 எம்.எல்.ஏக்கள், 7 எம்.பி.க்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று தினகரன் சந்தித்தார்.
சென்னை: ஆளுநர் வித்யாசாகர் ராவை தமது ஆதரவு 3 எம்.எல்.ஏக்கள் மற்றும் 7 எம்.பி.க்களுடன் அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலர் தினகரன் இன்று சந்தித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்திருந்தனர். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் இது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை என கூறிவிட்டார் ஆளுநர். இது தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடமும் எதிர்க்கட்சிகள் மனு கொடுத்திருந்தன.
இந்நிலையில் தமது ஆதரவு 3 எம்.எல்.ஏக்கள் மற்றும் 7 எம்.பி.க்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று நண்பகல் 12.30 மணிக்கு தினகரன் சந்தித்தார். தினகரனுடன் எம்.எல்.ஏக்கள் கருணாஸ், கலைச்செல்வன், ரத்தினசபாபதி சென்றனர். அதேபோல் செங்குட்டுவன் உட்பட 7 எம்.பிக்களும் தினகரனுடன் சென்று ஆளுநரை சந்தித்தனர்.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications