அட போங்க சார் அவரைப் போயி.. மதுசூதனை இப்படிக் கிண்டிலடிக்கிறாரே தினகரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  எம்.எல்.ஏக்கள் ஊதிய உயர்வை கலாய்த்த டிடிவி தினகரன்- வீடியோ

  சென்னை: அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனே ஒரு பெரிய பிராடு என்று தினகரன் அவரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

  தமிழக சட்டசபை கடந்த 8-ஆம் தேதி கூடியது. இதில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க அனுமதி அளிக்கவில்லை என்று கூறி அவர் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.

   Dinakaran ridicules Madhusoodanan for his revolt against CM

  இதுகுறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக எம்எல்ஏக்களை தக்க வைப்பதற்காக ஊதிய உயர்வை எடப்பாடி அரசு வழங்கவுள்ளது. அதிமுக எம்எல்ஏக்களுக்கு மட்டும் கொடுக்கமுடியாது என்பதால் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கொடுக்கின்றனர்.

  இதுதான் கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது. ஊரான் வீட்டு நெய்யே எங்கள் அண்ணன் பொண்டாட்டி கையே என்று எங்கள் ஊர்ல பழமொழி சொல்வாங்க. நம்ம வீட்லயே நெய் இருக்கும், ஆனா அடுத்தவங்க வீட்டு நெய்யை எடுத்து ஊற்றுவர். அது மாதிரி எடப்பாடியார் எல்லா எம்எல்ஏக்களுக்கும் ஊதிய உயர்வை வழங்குகிறார்.

  கடைத் தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பதெல்லாம் எடப்பாடி சரியாக செய்வார். மதுசூதனனே பெரிய பிராடு. அவரெல்லாம் பெரிய ஆளுனு நீங்க கேக்கறீங்க. ஆர்கே நகர் தேர்தலுக்கு காரணம் மதுசூதனன். பிறகு துரோகிகளான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்.

  எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் இருந்த போது இரட்டை இலை சின்னம் மக்கள் சின்னம். தற்போது துரோகிகளிடம் இருப்பதால் மக்கள் எப்படி ஏற்பார்கள். அதிமுகவுக்கு கிடைத்த இந்த வாக்குகள் ஏதோ ரூ. 6000 கொடுத்ததால் கிடைத்தது. இல்லாவிட்டால் டெபாசிட்டை இழந்திருப்பர் என்றார் டிடிவி தினகரன்.

  பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

  English summary
  TTV Dinakaran has ridiculed ADMK leader Madhusoodanan for his revolt against CM and writing a letter to the CM regarding his defeat in RK Nagar.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற