For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தினகரனை சந்தித்து வரும் எம்.எல்.ஏக்கள்.... பதற்றத்தில் எடப்பாடி... என்ன நடக்கும்?-வீடியோ

திஹார் சிறையில் இருந்து கடந்த சனிக்கிழமை வெளிவந்துள்ள தினகரனை அதிமுகவின் 25க்கும் மேற்பட்ட எம்.எல்க்கள் சந்தித்து வருகின்றனர். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதற்றத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: திஹார் சிறையில் இருந்து தினகரன் விடுதலை அடைந்து வெளியே வந்துள்ளார். அவரை 25க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் சந்தித்து வருவதால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் பதற்றத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி, நள்ளிரவில் தினகரன் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன்பின்பு 35 நாட்கள் சிறையில் அடைப்பட்டுக்கிடந்த தினகரன் கடந்த சனிக்கிழமை விடுதலையாகி சென்னை வந்தார்.

 In Dinakaran's besant nagar house Admk MLAs meeting Dinakaran.

அவர் சென்னை வந்த பிறகு, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சென்று சந்தித்து வந்தார். சசிகலா தன்னை 60 நாட்கள் பொறுமையாக இருக்கும்படிக் கேட்டுக்கொண்டார் என செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்நிலையில், சென்னை பெசண்ட் நகரில் இருக்கும் அவரது வீட்டுக்குச் சென்று தோப்பு வெங்கடாச்சலம், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்லிட்ட 25க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் நேற்றும் இன்றும் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இதில் அதிமுகவின் இன்றைய நிலை குறித்து விவாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எம்.எல்.ஏக்களின் இந்த சந்திப்பால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கலக்கமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ள இருந்த அனைத்து நிகச்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In Dinakaran's house Admk MLAs meeting Dinakaran. Nearly 25 minister met Dinakaran and it made everyone of Edappadi team in confusion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X