முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிரட்டும் தொனியில் பேசுகிறார்- தினகரன் குற்றச்சாட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிரட்டும் தொனியில் பேசிவருவதாக தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது:

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிரட்டும் தொனியில் ஒருமையில் பேசி வருகிறார். அவரது இத்தகைய பேச்சுக்காக வேதனைப்படுகிறேன்.

அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை என்று பிள்ளைகள் மீது சத்தியம் செய்தவர் திண்டுக்கல் சீனிவாசன். இன்று எங்கள் குடும்பத்தின் மீது பழிபோட்டு பேசுகிறார்.

ராஜினாமா செய்வார்களா?

ராஜினாமா செய்வார்களா?

ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலா குடும்பம் காரணம் என கூறும் மானமிகுக்கள் சசிகலா தந்த பதவிகளை ராஜினாமா செய்யட்டும். நான் சென்னையில் 25 ஆண்டுகளாக குடியிருக்கிறேன்.

கைதுக்கு அஞ்சிய எடப்பாடி

கைதுக்கு அஞ்சிய எடப்பாடி

ஆனால் சென்னையில் நான் இருந்திருந்தால் மாமியார் வீட்டுக்கு போயிருப்பேன் என பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. முதல்வர் பதவியில் அமர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, சேகர் ரெட்டியுடனான தொடர்பால் கைது செய்யப்படலாம் என அஞ்சினார். அதனால் சசிகலாவை சந்திக்க மறுத்துவிட்டார்.

கணக்கு பிள்ளை

கணக்கு பிள்ளை

மாவட்ட செயலாளர்களுக்கு கணக்கு பிள்ளையாக இருந்தவர் தற்போதைய அமைச்சர் வெல்லமண்டி நடராசன், என்னை திருடன் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருக்கிறார்.

டெல்லியில் ஓபிஎஸ் புகார்

டெல்லியில் ஓபிஎஸ் புகார்

அமைச்சர்கள் அனைவரும் ஒருவித பயத்திலேயே இருக்கின்றனர். துப்பாக்கி முனையில் தம்மை மிரட்டியதாக டெல்லியில் புகார் செய்திருக்கிறார் ஓபிஎஸ்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
AIADMK (Amma) Deputy General Secretary DInakarna slammed that CM Edappaadi Palanisamy.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற