மஸ்கோத் அல்வா.. பீமபுஷ்டி அல்வா.. சட்டசபையைக் கலக்கிய "வாவ்" விவாதங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் காரசார விவாதத்திற்கு இடையே இனிப்பான அல்வா விவாதமும் நடைபெற்று அவையை சிரிப்பலையில் ஆழ்த்தியது.

கடந்த 8ஆம் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் சட்டசபையில் தனது முதல் உரையை வாசித்தார். இது குறித்து விமர்சித்த திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மொத்தத்தில் ஆளுனர் உரை மஸ்கோத் அல்வா போன்று உள்ளது என குறிப்பிட்டார்.

ஸ்டாலினின் அல்வா கிண்டலை வைத்து சட்டசபையில் நேற்று இனிப்பான விவாதம் நடந்தது. இதை வைத்து ட்விட்டரில் சமூக வலைத்தளவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.

அல்வா சத்தானது

அல்வா சத்தானது

இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக சட்டசபையில் நேற்று பேசிய, அமைச்சர் ஜெயகுமார், மஸ்கோத் அல்வா குறித்து இணையத்தில் தேடினேன்,அது போஷாக்கானது என கூறப்பட்டுள்ளது. அதுபோல் ஆளுநர் உரையும், தமிழகத்திற்கு போஷாக்கானது என்று கூறினார். அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவோ, ஆளுநர் உரை பீமபுஷ்டி அல்வா போல ருசியானது... சிறப்பானது என்று கூறினார் அதைக்கேட்டு எம்எல்ஏக்கள் சிரித்தனர்.

அரசு அல்வா கடை

அரசு அல்வா கடை

இதற்கு திமு.க எம்எல்ஏ தங்கம் தென்னரசு, பீமபுஷ்டி அல்வா, மஸ்கோத் அல்வா பற்றி பேசுகிறீர்கள். ஆர்.கே நகரில் கொடுத்த அல்வா குறித்து பேசவில்லையே. அங்கு அரசாங்கமே அல்வா கடை வைத்துள்ளது என்று கூற சிரிப்பலை எழுந்தது.

திமுக டெக்னிக்

அப்போது, குறுக்கிட்ட அமைச்சர் தங்கமணி, ஆர்.கே.நகர் மக்கள், திமுகவுக்குத்தான் அல்வா தந்தனர். அது, திருமங்கலத்தில் நீங்கள் கண்டுபிடித்தது என்றதும், அதிமுக எம்எல்ஏக்கள் சிரித்தனர். அதற்கு, தங்கம் தென்னரசு, கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் இடைத்தேர்தல்களிலேயே அந்த டெக்னிக்கை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் என்று கூறினார் சட்டசபையில் நேற்று ஒரே, அல்வா மயமாக இருந்தது. இதை சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்துள்ளனர்.

மக்களுக்கு அல்வா

ஆளுனர் உரை மஸ்கோத் அல்வா: மு.க. ஸ்டாலின் ஆளுனர் உரை பீமபுஷ்டி அல்வா: அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா திமுகவும் அதிமுகவும் மாறி மாறி வாயால கிண்டறானுங்க.. கடைசியில மக்களுக்கு அல்வாதான் என்று கிண்டலடித்துள்ளார் ஒரு வலைஞர். மொத்தத்தில் நேற்றைய அல்வா பேச்சு வலைத்தளங்களிலும் வறுபடுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MK Stalin described the speech of the Governor as muscoth halwa saying that the Governor addressed only about the positive points and conveniently omitted the important issues like farmers issues.MLAs discussion about sweet talk about halwa in TamilNadu assembly.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற