For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமானத்தில் சோபியா கோஷமிட்டது சரியா? அமித் ஷா முதல் டிரம்ப் வரை.. சில எடுத்துக்காட்டுகள்!

பாஜகவிற்கு எதிராக கோஷமிட்ட மாணவி சோபியா செய்தது சரியா என்ற விவாதம் இணையத்தில் நடந்து வருகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    விமானத்தில் சோபியா கோஷமிட்டது சரியா?...இதோ சில எடுத்துக்காட்டுகள்!- வீடியோ

    சென்னை: பாஜகவிற்கு எதிராக கோஷமிட்ட மாணவி சோபியா செய்தது சரியா, அவர் விமானத்தில் அப்படி நடந்து கொண்டது சரியா என்ற விவாதம் இணையத்தில் நடந்து வருகிறது.

    தமிழிசை சென்ற விமானத்தில் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று தூத்துக்குடி விமான நிலையத்தில் மாணவி சோபியா கோஷமிட்டார். இதனால் அவருக்கு தமிழக பாஜக தலைவர் தமிழசை சௌந்தரராஜனுக்கு வாக்குவாதம் நடந்துள்ளது.

    இதுகுறித்து தமிழிசை போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சோபியா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    என்ன குற்றச்சாட்டு

    என்ன குற்றச்சாட்டு

    சோபியா மீது மொத்தம் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. முக்கியமாக விமானத்தில் அவர் நடந்து கொண்ட விதம் தவறு என்று கூறப்பட்டுள்ளது. சோபியாவின் கைது ஆதரவாக பேசும் பாஜக கட்சியினர் கூட, அவர் விமானத்தில் அப்படி செய்தது தவறு என்று விவாதம் செய்து வருகிறார்கள்.

    குழப்பமும் கேள்வியும்

    குழப்பமும் கேள்வியும்

    இந்த நிலையில் விமானத்தில் இப்படி கூச்சல் போடுவது தவறா என்று கேள்வி எழுந்துள்ளது. விமான நிலையத்திற்குள்ளும், விமானத்திலும் கூச்சல் போடுவது, மக்களுக்கு தொந்தரவு விளைவிப்பது குறித்து பல நாடுகளில் பல விதமான சட்டங்கள் நிலவுகிறது. அதே சமயம் அந்த சம்பவம் எந்த சூழ்நிலையில், எப்படி நடந்தது என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்வது வழக்கம்.

    தனி நபர்

    தனி நபர்

    அதேபோல் தனி நபர் ஒருவர் புகார் அளிக்கும்பட்சத்தில், அவருக்கு எதிராக தனிப்பட்ட வகையில் குறிப்பிட்ட நபர் பேசி இருக்க வேண்டும். ஆனால் இங்கு சோபியா தமிழிசைக்கு எதிராக எந்த வகையில் பேசவில்லை என்று தெரிகிறது. இது, ஒருவர் தங்கள் விருப்பத்தை பொதுவில் பேசுவதற்கு சமமான பேச்சு உரிமை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் இதனால், தன் மனம் புண்பட்டதாக, (பெயிலில் வரக்கூடிய பிரிவுகளில்) மட்டுமே தமிழிசை புகார் அளிக்க முடியும்.

    இரண்டும் நடந்துள்ளது

    இரண்டும் நடந்துள்ளது

    அதேசமயம் இந்தியாவில் நடைமுறையில் உள்ள சில பழக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். நம்முடைய விமான நிலையங்களில்தான், திமுக வாழ்க, அதிமுக வாழ்க, மோடி வாழ்க, ராகுல் ஜி வாழ்க என்று கோஷமிடுகிறார்கள். ஆயிரக்கணக்கில் பயணிகள் வந்தாலும், நோயாளிகள் வந்தாலும் இந்த சம்பவம் நடக்கும். அதிசயம் இந்தியாவிற்கு எதிரான நபர்கள் வரும் சமயத்தில் கருப்பு கொடி காட்டுவதும் நடக்கிறது. இவர்கள் யாரு கைது செய்யப்படுவது இல்லை.

    அமெரிக்காவில்

    அமெரிக்காவில்

    அமெரிக்காவில் கூட அதிபர் டிரம்பிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது. மிக முக்கியமான எடுத்துக்காட்டு கூற வேண்டும் என்றால் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவே 2017ல் கோவா விமான நிலையத்தில் அரசியல் கூட்டம் நடத்தி இருக்கிறார். பொது இடத்தில் விமான நிலையத்தில் பாஜக தலைவரே இதை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பறக்கும் விமானத்தில் நடந்து இருக்கிறது

    பறக்கும் விமானத்தில் நடந்து இருக்கிறது

    அதேபோல் பறக்கும் விமானத்தில் இதைவிட சில வித்தியாசமான சம்பவங்கள் நடந்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு இடையே சண்டை வந்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள் போட்டியின் வெற்றியை கொண்டாடி உள்ளனர். ஐபிஎல் வெற்றியை சென்னை வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இதனால், சோபியா கத்தியது விமான விபத்தை ஏற்படுத்தும் என்று வாதம் வைக்க முடியாது.

    English summary
    Discussion Erupts: Is it right, What Sophia has done in Aircraft?.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X