For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கட்டைப்பையும் காணாமல் போன கூச்சமும்.... - ஒரு குடும்ப தலைவரின் தீபாவளி பர்ச்சேஸ்

தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள் வாங்கப்போன ஒரு குடும்பஸ்தரின் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். படியுங்கள்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மனைவியோடு தி. நகர் பாண்டிபஜாரில் தீபாவளி பர்சேஸ் போன பொம்மையா முருகன், தனது பர்சேஸ் அனுபவங்கள் பகிர்ந்துள்ளார் படித்து ரசிங்க மக்களே!

#நேரம் மாலை 7.30 மணி

என்னங்க... இன்னைக்கு தீபாவளி பர்சேஸ் முடிச்சிட்டு வந்துடலாமா...?

Diwali purchase experience in a Family man

ம்...நீயே போய் எனக்கும் சேத்து எடுத்துட்டு வந்துடு...

நீங்களும் கூட வாங்க...

இல்லம்மா எனக்கு வேற வேல இருக்கு நேரமில்ல நீயே போயிட்டு வந்துடு...

நேரமில்லையா...? பாத்ரூம்ல கரப்பான் கூட பேச நேரமிருக்கு... கொல்லைல வாழை மரத்துக்கிட்ட மணிக்கணக்குல பேச நேரமிருக்கு... நீங்க தமனான்னு பேர்வச்ச செவுத்து பல்லிட்ட பேசநேரமிருக்கு ஆனா எங்கூட வர மட்டும் நேரமில்லைல...

ஐயோ அதில்லைமா...

என்ன அதில்ல... லேடீஸ் எல்லா எடத்துலயும் சுதந்திரமா பேச கேக்க முடியாது அவங்களுக்கும் கொஞ்சம் கூச்ச சுபாவம் இருக்கும் அந்த மாதிரியான இடத்துல உங்க ஹெல்ப் வேணும் புரிஞ்சுக்குங்க...

ஓ... அதான் சங்கதியா... சரி எனக்கு ஜட்டி பனியனெல்லாம் நான் எடுத்துக்கேறேன் மீதிய நீ எடுத்துட்டு வந்துடு என்ன ஓகே வா...

அய்யோ நா அத சொல்லல இப்ப நீங்க வரமுடியுமா முடியாதா...? பர்சேசுக்கு நீங்க எங்கூட வரணுங்கிற சின்ன ஆசைய கூட நீங்க மதிக்க மாட்டீங்களா...?

இப்ப என்ன உன்கூட ஷாப்பிங் வரணும் அதானே சரி வர்றேன்...

#நேரம் மறுநாள் காலை 10.15 மணி தி.நகர் ஜவுளிக்கடை புடவை செக்ஷன்

என்னங்க நீங்க இங்கேயே இருங்க நா புடவை செலெக்ட் பண்ணிட்டு வந்துடுறேன் நடுவுல போர் அடிச்சா இங்க கேன்டீன்ல காப்பி 10 ரூபா தான் போய் சாப்ட்டுட்டு வந்து உக்காந்துக்குங்க...

சரி... புடவை செலக்ஷனுக்கு நானும் வர்றேனே...

அதெல்லாம் நானே பாத்துக்கிறேன்.

#நேரம் மதியம் 1 மணி

இங்க ஒரு புடவகூட நல்லா இல்லைங்க.. வந்ததுக்காக ஒரே ஒரு மாத்து புடவை மட்டும் எடுத்துகிட்டேன்... விலையும் 1800 ரூபா ஜாஸ்த்தி தான்...

#நேரம் மதியம் 1.30 மணி

எடுத்த ரெடிமேட் பேண்ட்டை யெல்லாம் இங்கேயே உயர்த்த கட் பண்ணி தச்சிட்டு இருங்க நா உங்களுக்கு ஜட்டி பனியன் எடுத்துட்டு வந்த்டுறேன்..

ஜட்டி பனியனா... கூச்சம்ன்னு சொன்னியே...

கூச்சமா... எனக்கா...? நீங்க போய் ரெடிமேட் துணிய ஆல்டர் பண்ற வேலைய பாருங்க...

சரி... இன்னர் வேர் சைசு... ?

அதெல்லாம் எனக்கு தெரியும் நீங்க போங்க...!

கலர் செலக்ஷனுக்கு நானும் வரேன்...

போடுறது வெள்ள முண்டா பனியன் இதுல என்னாங்க கலர்... ஜட்டியும் மொத்தமும் ஆறு கலர் தான் துவைக்கிற எனக்குத்தான் தெரியும் என்ன கலர் உங்கட்ட இல்லன்னு...

#நேரம் மதியம் 2.15 மணி

இந்தாங்க இன்னர்வேர் ரெண்டு ரெண்டு செட்டு வாங்கிருக்கேன்... அந்த பில்ல பத்திரமா வச்சுகோங்க... ம்ஹும்... அந்த பழைய பில்லு புது பில்லு எல்லாத்தையும் என்ட கொடுங்க நீங்க எங்கேயாவது மாக்கா மாதிரி போட்டுட போறீங்க...

அவ்வளவு தானே கிளம்பலாமா...?

கிளம்பலாமா...? அப்ப பிள்ளைங்களுக்கு...?

அவங்கதான் போனவாரமே எடுத்துட்டாங்களே...?

எடுத்தா...? வந்ததுக்கு நாம எடுத்து கொடுக்க வேணாமா... நீங்க ஒன்னும் பணம் தரவேணாம் நா பாத்துக்குறேன்...

அதில்லம்மா....

நீங்க ஒன்னும் பேசவேணாம் எல்லாம் நான் பாத்துகிறேன்...

சரி... அந்த செலக்ஷனுக்கு நானும் வரலாமா...

அதெல்லாம் உங்களுக்கு ஒன்னும் தெரியாது நா பாத்துக்கிறேன்...

#நேரம் மாலை 7.30 மணி

என்ன... எல்லா பர்சேசும் முடிஞ்சிச்சா...

கிட்ட தட்ட முடிஞ்சிடுச்சி...

சரி வா கிளம்பலாம் இப்பவே பத்து ரூபாய்க்கு மேல கிழிஞ்சிடுச்சி...

இருங்க ஏன் அவசரப்படுறீங்க .. இந்தாங்க இந்த பில்லையெல்லாம் கணக்குப்பண்ணி கட்டப்பை வாங்கிட்டு வந்துடுங்க... ஒவ்வொரு ரெண்டாயிரம் ரூபாய்க்கும் ஒரு கட்டப்பைங்கிறத ஞாபகம் வச்சுக்கோங்க....

ஏன்... இதையும் நீயே வாங்கிட வேண்டியது தானே...?

போங்க... லேடிசுகுன்னு ஒரு கூச்ச சுபாவம் இருக்குங்கிறத புரிஞ்சுக்கோங்க அதுவும் இல்லாம ஓசி கியூல நா போய் நின்னா உங்களுக்கு தான் அசிங்கம் போங்க போய் கட்டப்பைய வாங்கிட்டு வாங்க...

English summary
Experience Diwali India's Festival of Lights, firsthand with a local family and knowledgeable guide in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X