தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாறிக் கிடக்கிறது...போட்டுத் தாக்கும் விஜயகாந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கீழடி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாறிக் கிடப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிவகங்கையை அடுத்துள்ள தன்னுடைய குல தெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் கீழடியில் இரண்டாம் கட்டமாக தொடங்கப்படாமல் இருக்கும் அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டார்.

DMDK president Vijayakanth claims that tn's law and order is degraded

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவினர் மக்களை பற்றி கவலைப்பட வில்லை என்றார். அதிமுகவின் இரு அணிகள் பற்றிய கேள்விக்கு பொங்கிய விஜயகாந்த் அது பற்றியெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் என்று டென்ஷன் ஆனார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நாறிப் போய் கிடப்பதாக தெரிவித்த விஜயகாந்த், நக்கலாக நாறிப்போயிருக்கு என்று 3 முறை கூறி கிண்டலாக சிரித்தார்.

தமிழகத்தில் மக்கள் குடிநீரின்றி தவிக்கும் நிலையில், அதுபற்றி எடப்பாடி அரசு எந்த கவலையும் இல்லாமல் மக்கள் நலனில் அக்கறையின்றி செயல்படுவதாகவும், 4 ஆண்டு அட்சியை தக்கவைப்பதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக இருப்பதாகவும் விஜயகாந்த் குற்றஞ்சாட்டினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMDK president visited Keezhadi excavation works and told in a gathered press reporters that tn law and order is in a degraded situation.
Please Wait while comments are loading...