For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வர் அஞ்சலி செலுத்திய போது கூட விடாத திமுக தொண்டர்கள்.. மெரினாவில் இடம் கேட்டு கோஷம்

மறைந்த கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்தியபோது திமுக தொண்டர்கள் மெரினாவில் இடம் வேண்டும் என கேட்டு முழக்கமிட்டனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல்வர் வருகையின் மெரினாவில் இடம் வேண்டும் என கோஷம் போட்ட தொண்டர்கள்

    சென்னை: மறைந்த கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்தியபோது திமுக தொண்டர்கள் மெரினாவில் இடம் வேண்டும் என கேட்டு முழக்கமிட்டனர்.

    தமிழக முதல்வர் இருக்கையை 5 முறை அலங்கரித்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

    DMK cadres shouted at CM Edappadi Palanisami while tributing Karunanidhi

    அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சாபநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்பி வேலுமணி, மக்களை துணை தலைவர் தம்பிதுரை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது ராஜாஜி ஹாலில் குவிந்திருந்த திமுக தொண்டர்கள் மெரினாவில் இடம் வேண்டும் என கோஷமிட்டனர். அஞ்சலி செலுத்திவிட்டு அவர்கள் வெளியேறும் வரை தொண்டர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர்.

    சென்னை மெரினாவில் அண்ணா சமாதி கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 8 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    DMK cadres shouted at CM Edappadi Palanisami while tributing Karunanidhi on the issue of Marina place.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X