அன்பை வெளிக்காட்டலாம்தான்.. தப்பே இல்லை.. ஆனால் மற்ற நோயாளிகளும் முக்கியம் இல்லையா?
சென்னை: காவேரி மருத்துவமனையில் திமுக தொண்டர்கள் கோஷமிட்டு வருவது மக்களிடையே முக சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கோபாலபுரம் வீட்டிலேயே அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
இதையடுத்து கடந்த 27ஆம் தேதி இரவோடு இரவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. முதல்முறையாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் கருணாநிதி.

குவிந்த தொண்டர்கள்
இதனால் கோபாலபுரம் இல்லத்தின் முன்பு கூடியிருந்த தொண்டர்கள் பதறினர். டிவியில் இதனை பார்த்த தொண்டர்களும் பதறியடித்து காவேரி மருத்துவமனையில் குவிந்தனர்.

தீவிர கண்காணிப்பில்
கருணாநிதிக்கு 4வது நாளாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார் கருணாநிதி.

செல்ல மறுப்பு
ஆனாலும் அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வருவதால் தொண்டர்கள் மருத்துவமனையில் இருந்து விலகிச் செல்ல மறுக்கின்றனர்.

விடிய விடிய கோஷம்
மாறாக இரவு பகல் என விடிய விடிய எழுந்துவா தலைவா என தொடர்ந்து கோஷமிட்டு வருகின்றனர். திமுக தொண்டர்களின் கோஷத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சக நோயாளிகளும் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.

அனைவருக்கும் பிரச்சனை
திமுக தொண்டர்கள் போடும் கோஷம் அப்பகுதியில் உள்ளவர்களுக்கும் இடையூறாக உள்ளது. மருத்துவமனை முன்பு நின்று இப்படி கோஷம் போட்டால் அத்தனை பேருக்கும் இடையூறுதான்.

முகம் சுளிக்கும் மக்கள்
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது இதையேதான் அதிமுக தொண்டர்கள் செய்தனர். அதே வேலையை தற்போது திமுக தொண்டர்களும் செய்து வருவது மக்களிடையே முகசுளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!