தேர்தல் வழக்கு : கோர்ட்டில் சரணடைந்த ஏற்காடு திமுக வேட்பாளர் மாறனுக்கு ஜாமீன்

சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் மாறன். மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தேர்தல் பணி குழு செயலாளரும் எம்.பி.யுமான டி.எம்.செல்வகணபதி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோரோடு இணைந்து மாறன் ஏற்காடு மலை கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்.வாழப்பாடி கிராம நிர்வாக அதிகாரி அய்யனார், தேர்தல் விதிமுறைகளை மீறி தி.மு.க. வேட்பாளர் மாறன் அதிக கார்களுடன் வாக்கு சேகரிக்க சென்றதாக வாழப்பாடி போலீசில் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் சிவகுமார் இது குறித்து தி.மு.க. வேட்பாளர் மாறன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை மாறன் சேலம் எண் 6 மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் தம்பிதுரை மூலம் சரண் அடைந்தார்.
நீதிமன்றத்தில் தரையில் அமர்ந்த வேட்பாளர்
இது பற்றி மாஜிஸ்திரேட் அம்பிகா விசாரணை நடத்தினார். தி.மு.க. வழக்கறிஞர்கள் திரளாக வந்து மாஜிஸ்திரேட்டிடம் மாறன் மீது போடப்பட்ட வழக்கு ஜாமீன் தரக்கூடிய வழக்கு தான். அதனால் உடனே ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டனர். அதற்கு மாஜிஸ்திரேட் வழக்கை விசாரித்த பின்னர் தான் ஜாமீன் வழங்க முடியுமா என தெரிவிக்க முடியும் என்றார்.
அதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் மற்ற வழக்கு விசாரணைக்கு வந்தவர்களுடன் தரையில் அமர்ந்திருந்தார் மாறன். இதனால் நீதிமன்றத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இந்த வழக்கை மாஜிஸ்திரேட் விசாரித்து மாறனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications