தொண்டர்களை கட்டிப்போட்ட 15 நிமிடம்.. ஸ்டாலின் வாழ்க்கையில் மிக முக்கியமான பேச்சு
திமுக செயல்தலைவர் ஸ்டாலின், திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய பேச்சு அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான பேச்சு ஆகும்.
சென்னை: திமுக செயல்தலைவர் ஸ்டாலின், திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய பேச்சு அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான பேச்சு ஆகும்.
ஸ்டாலின், திமுக செயற்குழு கூட்டத்தில் , திமுக தலைவர் கருணாநிதி மறைவு குறித்தும், மெரினா பிரச்சனை குறித்தும் மிகவும் உருக்கமாக பேசி உள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் முதல் முறையாக திமுக செயற்குழு கூட்டம் நடந்துள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடந்துள்ளது. ஸ்டாலின் பேச்சை கேட்டு திமுக உறுப்பினர்கள் கண்ணீர் விட்டனர் .

அரசுக்கு எதிர்
திமுக செயற்குழு கூட்டமாக இருந்தாலும் ஸ்டாலின் இதில் தமிழக அரசு குறித்த கண்டனத்தை பதிவு செய்தார். கருணாநிதியின் மறைவின் போது, அரசு எப்படி எல்லாம் அலைக்கழித்தது, திமுக அதை எதிர்த்து எப்படி எல்லாம் போராடியது என்று கூறினார். முக்கியமாக மெரினாவில் என் உடல் புதைக்கப்பட்டு இருக்கும் என்று கூறி,
அந்த பிரச்சனை எவ்வளவு வீரியமாக இருந்தது என்று நிரூபித்தார்.

ஒருங்கிணைத்தார்
அதோடு, கருணாநிதியின் சிறப்பை கூறிவிட்டு, ''அவருக்காக முதல்வரின் கையை பிடித்தேன், தலைவருக்காக என் மானம் போனால் கூட பரவாயில்லை'' என்று ஸ்டாலின் கூறினார். இது திமுக தொண்டர்கள் எல்லோரையும் அவர் பக்கம் மொத்தமாக இழுத்து இருப்பதாக திமுக தரப்பில் கூறுகிறார்கள். அந்த ஒரு பேச்சில் ஸ்டாலின் நின்றுவிட்டார், என்று திமுக உறுப்பினர்கள் தெரிவிக்கிறார்கள்.

பாசம்
மிக முக்கியமாக ஒரு மகனாகவும் குடும்பத்தில் ஸ்டாலின், பெயர் எடுத்துவிட்டார். என் அப்பாவை இழந்துவிட்டேன், அப்பாவிற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று கூறியதன் மூலம், குடும்பத்தில் தன்னை ஒரு பொறுப்பான மகனாக காட்டியுள்ளார். மெரினா விவகாரத்தில் வென்று அதை நிரூபித்தும் காட்டியுள்ளார்.

வாழ்க்கையில் மிக முக்கியமான பேச்சு
அதேபோல் அவர் இதில் அழகிரி பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அழகிரி குறித்து தனக்கு எந்த அச்சமும் இல்லை என்றும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். இது ஸ்டாலினின் வரலாற்றில் மிக முக்கியமான பேச்சாகும். முதல் முறை திமுக தலைவர் கருணாநிதி இல்லாமல் நடந்த செயற்குழு கூட்டத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார். அந்த ஒரு பேச்சிலேயே அவர் மொத்த தொண்டர்களையும் தன் பக்கம் இழுத்துள்ளார்.
-
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ்












Click it and Unblock the Notifications