காவிரி: திமுக சார்பில் அனைத்து கட்சிக் கூட்டம்- அதிமுக, பாஜக, கமலுக்கு அழைப்பு: ஸ்டாலின்
காவிரி பிரச்சனைக்காக திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: காவிரி பிரச்சனைக்காக திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்றும் இக்கூட்டத்துக்கு அதிமுக, பாஜக மற்றும் நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சியைத் தொடங்க உள்ள கமல்ஹாசன் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், கருணாநிதி என்னை அடையாளம் கண்டு கொண்டார். என்னுடைய கொள்கையை திமுக தெரிந்து கொண்ட பிறகு, அவர்களுக்கும் எனக்கும் சரி என்று பட்டால் எதிர்காலத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவோம். அக்கூட்டத்துக்கு அதிமுக, பாஜகவுக்கு அழைப்பு விடுப்போம்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் கமலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அவரும் பங்கேற்பதாக உறுதி அளித்திருக்கிறார். புதிய கட்சி தொடங்கும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள் என்றார்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்











Click it and Unblock the Notifications