வைகோ, விஜயகாந்த், தமிழிசை பிரண்ட்ஸ்... ஒன்லி எனிமி மு.க.ஸ்டாலின்... டிடிவி தினகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தான் வெற்றி பெறுவதற்கு தேமுதிக, பாஜக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள் ஆகியோர் தன்னை ஆதரிக்க வேண்டும் என்று அதிமுக துணை பொதுச் செயலாளரும், அதிமுக வேட்பாளருமான டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பலமுனை போட்டி நிலவுகின்றன.

இதன் மூலம் பிளவுப்பட்டுள்ள அதிமுகவில் எந்த அணிக்கு செல்வாக்கு என்பது குறித்தும் இதன் மூலம் தெரியவரும் என்பதால் இந்த தேர்தலை தமிழகமே உற்று நோக்கி வருகிறது.

அதிமுக ஆட்சி மன்றக் கூட்டம்

அதிமுக ஆட்சி மன்றக் கூட்டம்

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

வேட்பாளர் யார்?

வேட்பாளர் யார்?

இந்த ஆலோசனைக்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக தினகரனை ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளதாக அவை தலைவர் செங்கோட்டையன் அறிவித்தார்.

50,000 வாக்குகள் வித்தியாசம்

50,000 வாக்குகள் வித்தியாசம்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தினகரன் அளித்த பேட்டியில், நான் 50,000 வாக்குள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறு வந்தவுடன் ஜெயலலிதா விட்டு சென்ற நலத்திட்டங்களை தொடர்வேன்.

எனது கடமை

எனது கடமை

ஆர்.கே. நகர் சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவுடன் அந்த தொகுதி மக்களின் நலன்களுக்காக பாடுபடுவதே எனது தலையாய கடமை. நான் முதல்வர் பதவிக்கு வர ஆசையில்லை.

ஓபிஎஸ் செய்லபாடுகள் சரியில்லை

ஓபிஎஸ் செய்லபாடுகள் சரியில்லை

ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோது அவரது செயல்பாடுகள் சரியில்லாததால் கட்சியும், ஆட்சியும் ஒருவர் கையில் இருக்க வேண்டும் என்று கூறினோம். ஆனால் எடப்பாடியின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாக மக்கள் கூறுவதால் அவர் முதல்வராக தொடர்வார்.

எதிரி கட்சி திமுக

எதிரி கட்சி திமுக

எங்களது ஒரே எதிரி திமுகதான். திமுக எதிர்க்கட்சி என்பதுதான் எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்த நெறியாகும். அதை நாங்களும் பின்பற்றுகிறோம். திமுக வெற்றி பெறக் கூடாது என கருதும் அனைத்து கட்சிகளும் எங்களுக்கு ஆதரவு தந்தால் ஏற்றுக் கொள்வோம்.

மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக, பாஜக, கம்யூனிஸ்டுகள், மதிமுக ஆகிய கட்சிகள் என்னை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார் அவர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dmk is our only enemy, so Makkal Nala Kootani, BJP, DMDK, Communists all other political parties give support for win in RK Nagar, says TTV Dhinakaran.
Please Wait while comments are loading...