For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரஸுடன் கூட்டணி இல்லை: தேமுதிக வந்தால் மகிழ்ச்சி- மு.க. ஸ்டாலின்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்ற திமுகவின் பொதுக்குழுவில் எடுத்த நிலைப்பாட்டில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திமுக பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் பாஜகவுடனும் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் தேமுதிகவுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில் திடீரென மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து திமுக அணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி இடம்பெறும் என்று கூறப்பட்டு வருகிறது.

காங், பாஜகவுடன் கூட்டணி இல்லை

காங், பாஜகவுடன் கூட்டணி இல்லை

இந்நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் மு.க.ஸ்டாலின், பாஜக - காங்கிரஸ் கட்சிகளுடன் திமுக கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

காங். பாஜக அல்லாத அணி

காங். பாஜக அல்லாத அணி

மேலும், திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எங்கள் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. காங்கிரஸ், பாஜக ஆகிய தேசிய கட்சிகள் இல்லாத புதிய அணியை நாங்கள் உருவாக்குவோம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தேமுதிக வந்தால் மகிழ்ச்சி

தேமுதிக வந்தால் மகிழ்ச்சி

தேமுதிக குறித்த கேள்விக்கு, "எங்கள் கூட்டணியில் வந்து சேருமாறு தே.மு.தி.க.வுக்கு கலைஞர் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். தே.மு.தி.க., எங்கள் பக்கம் வந்தால், நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்" என்று ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

ஆசாத் சந்திப்பு மரியாதை நிமித்தமானது

ஆசாத் சந்திப்பு மரியாதை நிமித்தமானது

மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத்- கருணாநிதி சந்திப்பு குறித்து பதிலளித்துள்ள ஸ்டாலின், குலாம்நபி ஆசாத் சமீபத்தில் தலைவரை சந்தித்ததை தொடர்ந்து காங்கிரசுடன் கூட்டணியா என்ற பேச்சு எழுந்தது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று குலாம்நபி ஆசாத்தே கூறியுள்ளார். எந்த கட்சிக்காரர்கள் வந்தாலும், அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திக்க கலைஞர் தவறியதே இல்லை. எனவே குலாம்நபி ஆசாத் வந்து சந்தித்ததில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்றும் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

விஜயகாந்த்- திருமா. சந்திப்பு

விஜயகாந்த்- திருமா. சந்திப்பு

இதேபோல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சந்தித்தது தொடர்பான கேள்விக்கு, தொல்.திருமாவளவன் ஒரு திருமணத்துக்கு அழைக்கவே விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளார். நாங்கள் அவரை விஜயகாந்துடன் சந்திக்க சொல்லவில்லை''என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
DMK's heir apparent M K Stalin has ruled out any pre-poll alliance between his party and either of the two national players - BJP and Congress - in the forthcoming parliamentary elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X