கருணாநிதி வீட்டை அதிர வைத்த பாஜகவினரின் பாரத் மாதா கீ ஜே கோஷம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  என் வீட்டில் வந்து ஓய்வெடுங்கள்... கருணாநிதிக்கு மோடி அழைப்பு- வீடியோ

  சென்னை: திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் திரண்ட பாஜகவினர் திடீரென பாரத் மாதா கீ ஜே என கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கருணாநிதி இல்லத்தில் சுமார் 15 நிமிடங்கள் இருந்தார் பிரதமர் மோடி.

  DMK leaders shock over BJP Cadre's slogan

  பிரதமர் மோடியின் வருகையைத் தொடர்ந்து கருணாநிதி இல்லம் முன்பாக திமுக மற்றும் பாஜக தொண்டர்கள் குவிந்தனர். கருணாநிதியை சந்தித்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டுச் சென்றார்.

  ஆனாலும் கலைந்து போகாமல் பாஜக தொண்டர்கள் கருணாநிதி வீடு முன்பே குவிந்திருந்தனர். அவர்கள் திடீரென பிரதமர் மோடி மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதாகைகளை ஏந்தியபடி பாரத் மாதா கீ ஜே என கோஷம் போட கருணாநிதி வீடே அதிர்ந்தது.

  இதை சற்றும் எதிர்பார்க்காத திமுக நிர்வாகிகள் சற்றே அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். திமுக தொண்டர்கள் அமைதி காத்தனர். சிறிது நேரம் கழித்து கருணாநிதி தொண்டர்களை பார்த்து நேரில் சந்தித்து கையசைத்தபோது கருணாநிதி வாழ்க என்கிற கோஷமும் அதிர வைத்தது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  DMK cadres and leaders were surprised when the BJP cadres raised "Bharat Mata Ki Jai" slogan during the arrival of PM Modi at party Chief Karunanidhi's house today.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற