மீண்டும் அதே பஞ்சாயத்து.. சட்டசபையில் டிடிவி தினகரனை புகழ்ந்த அதிமுக எம்.எல்.ஏ.. எதிர்த்த திமுக

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ. குமரகுரு அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை புகழ்ந்ததற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது.

பட்ஜெட் உரைக்கு முன்பாக ஜெயலலிதா, சசிகலா, தினகரன் ஆகியோருக்கு அமைச்சர் ஜெயக்குமார் புகழாரம் சூட்டியபோது திமுக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று, சட்டசபையில் டிடிவி தினகரனுக்கு அதிமுக எம்.எல்.ஏ. குமரகுரு புகழாரம் சூட்டி பேச ஆரம்பித்தார். பட்ஜெட் மீதான உரையின்போது இவ்வாறு அவர் பேச்சை தொடங்கினார்.

 DMK members oppose AIADMK MLA for praising TTV Dinakaran

தினகரனை புகழ்ந்ததற்கு எதிராக திமுகவினர் முழக்கம் எழுப்பியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. பெஃரா வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட தண்டனை குற்றவாளி தினகரன் என்று திமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

திமுக உறுப்பினர்கள் எதிர்ப்புக்கு நடுவேயும், குமரகுரு பேச்சு அவைக்குறிப்பிலிருந்து அகற்றப்படவில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK members oppose AIADMK MLA for praising TTV Dinakaran in the Assembly.
Please Wait while comments are loading...