சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க திமுக முடிவு- எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்
சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க திமுக முடிவு செய்துள்ளது.
சென்னை: சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க முடிவு செய்து திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அக்கட்சி செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கூட்டணி கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், அது குறித்து திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டதை படித்து பார்த்தபின்னரே தம்முடைய கருத்தினை தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,
சட்டசபை கூட்டத்தில் திங்கள்கிழமை முதல் பங்கேற்க முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவது; ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications