கதிராமங்கலத்தில் கைது செய்தவர்களை விடுவிக்க ராஜ்யசபாவில் திருச்சி சிவா வலியுறுத்தல்!

கதிராமங்கலத்தில் கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என ராஜ்யசபாவில் திமுக எம்பி திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கதிராமங்கலத்தில் கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என ராஜ்யசபாவில் திமுக எம்பி திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார். ஓஎன்ஜிசி நிறுவனத்தால் கதிராமங்கலத்தில் நீரும் நிலமும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் திருச்சி சிவா கூறியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

DMK MP Trichy Siva raised the Kathiranmangalam issue in the Rajya sabha

இந்நிலையில் திமுக எம்பி திருச்சி சிவா ராஜ்ய சபாவில் கதிராமங்கலம் பிரச்சனை குறித்து பேசினார். அப்போது கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்காக எதிராக போராடியவர்களை விடுவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடியவர்களுக்கு ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். கதிராமங்கலம் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் கதிராமங்கலம் கிராமத்தில் குடிநீரும், விவசாய நிலமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எனவே ஒஎன்ஜிசி பணிகளை நிறுத்தி அவர்களை உடனடியாக கதிராமங்கலத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் திருச்சி சிவா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+