For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையைத் தாக்கல் செய்ய வேண்டும்.. ஹைகோர்ட் அதிரடி

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி திங்கள்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    உள்ளாட்சித் தேர்தலுக்கான வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி திங்கள்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் 2016 நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பழங்குடியின இடஒதுக்கீடு காரணமாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

    DMKs Court contempt case on election commision: Chennai HC gives its verdict

    அதன்பின் உள்ளாட்சி தேர்தலை சென்று வருடம் மே 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் தேர்வு காலம் என்பதால் அப்போது தேர்தலை நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.

    அதன்பின் மீண்டும் நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத, மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது திமுக சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது.

    உள்ளாட்சி தேர்தல் நடத்தாதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட் அவமதிப்பு வழங்கு தொடுக்கப்பட்டது. ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. சென்னை ஹைகோர்ட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி திங்கள்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    வழக்கு விசாரணையின் போது, நாளை தேர்தல் அட்டவணை தாக்கல் செய்வதாக தமிழக அரசு வழக்கறிஞர் கூறினார். ஒருவாரம் அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள், சரியான அட்டவணையை தாக்கல் செய்யுங்கள் நீதிபதிகள் பதில் அளித்தனர்.

    எப்போது தேர்தல் நடத்தப்படும், எப்போது வாக்கு எண்ணிக்கை, எப்போது வேட்புமனுத்தாக்கல் உள்ளிட்ட அனைத்து தேதியையும் பட்டியலிட்டு அனுப்ப வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் பெஞ்ச் உத்தரவு பிறப்பித்து உள்ளது

    திங்கள்கிழமை தேர்தல் அட்டவணை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பிற்கு தேர்தல் ஆணையம், தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக வேண்டிவரும் என்று ஹைகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    English summary
    DMK's Court contempt case on election commision on civic elections issue: Chennai HC gives its verdict.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X