சட்டசபையைக் கூட்டுங்கள்.. முதல்வரை நேரில் சந்தித்து திமுக கொறடா சக்கரபாணி வலியுறுத்தல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் பழனிச்சாமியை, திமுக கொறடா சக்கரபாணியை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி சந்தித்து பேசிய பின்னர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

DMK whip Chakrapani meets CM

சட்டசபையை உடனடியாக கூட்டி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை நடத்த வேண்டும் என்று கோரி முதல்வரிடம் மனு அளித்துள்ளோம். மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் பழனிச்சாமி, விரைவில் சட்டசபையைக் கூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார் என்று சக்கரபாணி கூறினார்.

முன்னதாக, அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டசபைக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல்வர் பழனிச்சாமியை, திமுக கொறடா சக்கரபாணி நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK whip Chakrapani has met CM Palanisamy for demanding assembly session.
Please Wait while comments are loading...