இந்து மத பாதுகாவலர்கள் போர்வையில் வைரமுத்துவை விமர்சிப்பதா?... ஸ்டாலின் கண்டனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கவிஞர் வைரமுத்து மீதான கடுமையான விமர்சனத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அநாகரிகத்திற்கும்,வரம்பு மீறலுக்கும் தமிழகத்தில் இடம் இல்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அமெரிக்க அறிஞர் ஒருவர் ஆண்டாள் குறித்து கூறிய இருந்த கருத்தை சுட்டிக்காட்டியதால் கவிஞர் வைரமுத்து சர்ச்சையில் சிக்கினார். வைரமுத்துவின் கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா உள்ளிட்டோர் கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில் வைரமுத்து மீதான கடுமையான விமர்சனத்திற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :

அநாகரீகத்திற்கும், வரம்பு மீறலுக்கும் நிச்சயம் தமிழகத்தில் இடமில்லை. சிலர் தங்களின் சுயநலனுக்காக வைரமுத்து மீது அராஜகமான கருத்துகளை தெரிவிக்கின்றனர் என்று ஸ்டாலின் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக வைரமுத்து குறித்த அவதூறான கருத்துகள் சமூக வலைதளங்களில் உலவி வருகின்றனர். தான் ஆண்டாள் பற்றி புண்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் கூறவில்லை என்று வைரமுத்து விளக்கம் அளித்த பின்னரும் அவர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வைரமுத்து வருத்தம் தெரிவித்திருந்தார்

வைரமுத்து வருத்தம் தெரிவித்திருந்தார்

தமிழை ஆண்டாள்" என்ற தலைப்பில் பாரம்பரியமிக்க தனியார் நாளிதழில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கட்டுரையில், ஆண்டாள் குறித்து அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கவிஞர் வைரமுத்து எவ்விதத் தயக்கமும் இன்றி உடனடியாக விளக்கம் அளித்து "யாருடைய மனதினையும் புண்படுத்துவது நோக்கமல்ல. புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்" என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

நம்பிக்கை இல்லை

நம்பிக்கை இல்லை

அக்கட்டுரையைப் பிரசுரித்த நாளிதழிலும் "ஆசிரியர் வருத்தம்" என்றெல்லாம் போடாமல், இதழின் பெயரையே போட்டு வருந்துகிறது" என்று ஒட்டுமொத்தமாக நாளிதழே வருத்தம் தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்து மதம் உள்ளிட்ட எந்தவொரு மதத்தினரின் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் விமர்சிப்பதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை.

சாதி வேறுபாடின்றி

சாதி வேறுபாடின்றி

"வேற்றுமையில் ஒற்றுமை" என்ற அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டிற்கு வலு சேர்க்கும் விதத்தில் அனைத்து மதத்தினரும் சாதி வேறுபாடின்றி, "சமத்துவம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை" போன்றநெறிகளை உயர்த்திப் பிடித்து நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபட வேண்டும் என்பதுதான் திமுகவின் விருப்பம்.

அராஜகமான கருத்துகள்

அராஜகமான கருத்துகள்

ஆனால் "வெறுப்பு அரசியலுக்கு எப்போது விதை தூவலாம்; வெறுப்புக் கனலை விசிறிவிட எப்போது வாய்ப்பு கிடைக்கும்" என்று காத்துக் கொண்டிருக்கும் ஒரு சிலர் தாங்கள்தான் ஒட்டு மொத்த இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் கவிஞர் வைரமுத்து மீதும், அக்கட்டுரையை வெளியிட்ட நாளிதழ் மீதும் அராஜகமான கருத்துகளைத் தெரிவிப்பது.

ஏற்க முடியாது

ஏற்க முடியாது

பத்திரிக்கை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று மிரட்டுவதும் துளியும் நாகரிகமானது அல்ல என்பதோடு மட்டுமல்ல- மிகவும் அருவருக்கத்தக்க செயல் என்று திமுக சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிலர் தங்களின் சுயநலனுக்காகவும், விளம்பர வெளிச்சத்திற்காகவும் அமைதி தவழும் தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்திலும், தரம் தாழ்ந்த வகையிலும் தமிழ் மண்ணின் கவிஞர் வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனநாயகத்தில் கருத்துக்கு மாற்றுக் கருத்து மட்டும் இருக்க முடியுமே தவிர, அநாகரிகத்திற்கும் வரம்புமீறலுக்கும் நிச்சயம் தமிழகத்தில் இடமில்லை என்று திமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK working president M.K.Stalin condemns abusive attack against Writer Vairamuthu, and also says there is an oppose for a statment rather abusing a person.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற