மாம்பழங்களால் புற்றுநோயா? ரசாயன கல் வைத்து பழுக்க வைத்ததை ஈஸியாக கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்
சென்னை: மாம்பழ சீசன்கள் ஆரம்பித்து விட்டன. அந்த மாம்பழங்களை எப்படி பார்த்து வாங்குவது, ரசாயன கல் வைத்து பழுக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்களை பார்க்கலாம்.
முக்கனிகளில் மா, பலா, வாழை என்பார்கள். இவற்றில் மாம்பழம் கோடை காலத்தில் சீசன் இருக்கும். இதனால் மக்கள் அந்த பழங்களை விரும்பி வாங்குவர். மாம்பழங்களில் அல்போன்ஸா, மல்கோவா, செந்தூரா, நீலம் உள்ளிட்ட வகைகள் உள்ளன.
இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. பொதுவாக மாம்பழங்கள் தானாக பழுக்க வேண்டும். சிலர் அதை அரிசி டிரம்பில் போட்டு வைப்பர், சிலர் வைக்கோல் போட்டு அதில் மாம்பழங்களை வைத்து பழுக்க வைப்பர்.

அதிக லாபம்: இதுதான் இயற்கையானது. இதனால் எத்தனை மாம்பழங்களை சாப்பிட்டாலும் உடலுக்கு ஒன்றுமே ஆகாது. இந்த நிலையில் மாம்பழங்களை மக்கள் வாங்கி அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மக்களின் உயிர்களுடனே சில வியாபாரிகள் விளையாட தொடங்கிவிட்டார்கள். மாம்பழங்கள் செங்காயாக இருக்கும் போதே அதை பழுக்கவைக்க ரசாயன கார்பைட் கல்லை வைத்துவிடுகிறார்கள்.
உடல் உபாதைகள்: இதனால் உடலுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. தீராத வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவை ஏற்படுகின்றன. இதனால் சிலருக்கு புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே கல் வைக்காத மாம்பழங்களை எப்படி வாங்குவது என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியை பார்ப்போம். அவர் கூறுகையில் மாம்பழம் சீசன் வந்துவிட்டது. எந்தெந்த கடைகளில் மாம்பழங்கள் விற்கிறார்கள் என்ற முழு பட்டியல் எங்களிடம் உள்ளது.
கெமிக்கல் ஸ்பிரே: இந்த கடைகளுக்கு நாங்கள் குழுக்களாக சென்று இயற்கை மாறாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்து வருகிறோம். மாம்பழங்களில் கெமிக்கல் ஸ்பிரே செய்து கெமிக்கல் பாக்கெட்டுகளை போட்டு வைத்தும் பழுக்க வைக்கிறார்கள். எனவே சீசன் தொடங்கும்போதே நாங்கள் கண்காணிப்பை அதிகரித்துள்ளோம். மாம்பழங்களை எப்படி வாங்குவது என பொதுமக்கள் எங்களிடம் கேள்வி கேட்கிறார்கள்.
பார்த்தவுடன் கண்டறியலாம்: பழக்கடைகளிலோ அல்லது சூப்பர் மார்க்கெட்டுகளிலோ சென்றவுடன் மாம்பழங்களை பார்த்தவுடன் நாம் இயற்கையாக பழுக்க வைத்ததா இல்லை செயற்கையாகவா என்பது தெரிந்து கொள்ள வேண்டும். மாம்பழங்களை அழகாக அடுக்கி வைத்திருப்பார்கள். அவற்றை பார்த்தால் எல்லாமே ஒரே மாதிரி இருக்கும். அது எப்படி பழுக்கும் என நம் மனதிற்குள் சந்தேகம் ஏற்பட வேண்டும்.
மஞ்சளா இருக்கும்: அந்த பழம் பார்ப்பதற்கு மஞ்சளா சாப்பிடுவதற்கு ஆசையாக இருக்கும். ஆனால் முகர்ந்து பார்த்தால் வாசனை ஏதும் வராது. ஒரு அறையில் ஒரு மாம்பழம் வைத்தாலே அதிக வாசனை வரும், ஆனால் அத்தனை மாம்பழங்கள் இருக்கும் நிலையில் ஒரு வாசனை கூட வராமல் இருக்கும். இது தெரியாமல் நாம் வீட்டிற்கு மாம்பழங்களை வாங்கி வந்துவிட்டோம். இதில் கல் வைத்திருக்கிறார்களா இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிக்கிறது என பார்க்கலாம்.

தண்ணீரில் மூழ்கும்: ஒரு பக்கெட் தண்ணீரில் போடுங்கள். இயற்கையாக பழுத்திருந்தால் அந்த பழங்கள் நீருக்கு அடியில் செல்லும். செயற்கையாக கல் வைத்து பழுத்திருந்தால் அவை மேலே மிதக்கும். அந்த பழத்தை கட் செய்யும் போது காயை கட் செய்வதுபோல் இருக்குமே தவிர பழத்தை கட் செய்வது போல் இருக்காது. மேலே மட்டுமே பழுக்கும் மாம்பழங்களில் உள்ளே புளிப்பு அப்படியே இருக்கும். கட் செய்யும் போது கரகரவென இருக்கும்.
5 நிலைகளில் பழுக்கும்: மாம்பழத்தின் பக்கத்தில் வெள்ளையாக இருந்தாலே அந்த பழம் செயற்கையாக பழுக்க வைத்தது என கண்டறியலாம். மாம்பழங்கள் இயற்கையாக 5 நிலைகளில் பழுக்கும். முதலில் காயாக இருக்கும். பிறகு அதன மூக்கு பகுதி பழுக்கும். மூக்கு பகுதி முதல் காம்பு பகுதி வரை கொஞ்சம் கொஞ்சமாக பழுக்கும். பழுக்கும் போது இயற்கையான பழத்தில் ஆங்காங்கே சிவப்பு நிறம், மஞ்சள் நிறம் கலந்து இருக்கும். மாம்பழத்தை சாப்பிடும்போது அதில் ஒரிஜினலான மாம்பழத்தின் டேஸ்ட் இருக்காது. புளிப்பு தன்மைதான் இருக்கும். அதை வைத்தும் கண்டுபிடிக்கலாம். இவ்வாறு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications