For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓய்வுக்கு பிறகு ஒரு இடம் தேவை.. அதான் அரசியலுக்கு வராங்க.. நடிகர்களை விமர்சித்த டாக்டர் கிருஷ்ணசாமி

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

மதுரை: ஓய்வுக்கு பிறகு நடிகர்களுக்கு ஒரு இடம் தேவை. அதற்காகவே அவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் மேலும் கூறுகையில்
நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம். அத்தகைய சூழ்நிலையில் 2 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவது தேவையற்ற செலவு ஆகும்.

Dr. Krishnasamy criticises Actors who are coming to politics

மேலும் அந்த பகுதியில் நடைபெறும் அரசு வேலை, திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும். எனவே பொதுத் தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தலையும் நடத்திவிடலாம். தேவேந்திரகுல வேளாள மக்கள் பண்டைய காலத்திலிருந்து இலக்கியங்களில் மகுத நில மக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

திராவிட இயக்கங்கள்
70 ஆண்டுகள் மோசடி செய்து அவர்களை பின்தங்கிய சமுகமாக மாற்றியுள்ளது.

இட ஒதுக்கீடு இல்லாமல் தங்களது திறமையால் மருத்துவம், பொறியியல்., சட்டம் போன்ற துறைகளில் முன்னேறி வந்துள்ளனர் .

தேவேந்திர குல வேளாளர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பட்டியல் பிரிவிலிருந்து நீக்கி உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு- மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும்.
2003-04-இல் குறிப்பாக ஜெ மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்த போது தனது பெயரை மாற்றி வெளிநாட்டு தொடர்பில் உள்ளார் திருமாவளவன்.

அவருக்கு வழங்கப்பட உள்ள முனைவர் பட்டம் ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்து மனோன்மணியம் பல்கலை கழக பதிவாளர் , மற்றும் பேராசிரியரிடம் புகார் அளித்துள்ளோம். இதனை மீறி முனைவர் பட்டம் வழங்கினால் நீதிமன்றம் செல்வோம்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து
அவர்கள் ஒய்வு பின் , மற்றொரு இடம் தேவை. அதனால் அரசியலுக்கு வருகிறார்கள் என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி.

English summary
Puthiya thamilagam party's chief Krishnasamy criticises actors turns into politician.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X