For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமர்சனங்களை வெறுக்காமல் ரசித்தவர் கருணாநிதி.. ராமதாஸின் பிறந்த நாள் வாழ்த்து!

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : ஜூன் 3ம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, கருணாநிதியுடனான தனது நினைவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

Dr Ramadoss wishes Karunanidhi

"திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழாவும், சட்டப்பேரவை வைரவிழாவும் நாளை கொண்டாடப்படுவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைகிறேன். 94வது பிறந்த நாள் காணும் நண்பர் கருணாநிதிக்கு உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் மிக நீண்ட அரசியல் பயணம் கருணாநிதியுடையதுதான். திருவாரூர் மாடவீதிகளில் 14 வயதில் தொடங்கிய அவரது அரசியல் பயணம் ஈரோடு, காஞ்சிபுரம் வழியாக 80 ஆண்டுகளைக் கடந்து கோபாலபுரத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 4 தலைமுறை தலைவர்களுடன் அரசியல் செய்துவரும் பெருமை கருணாநிதிக்கு மட்டுமே உண்டு.

கருணாநிதிக்கும், எனக்கும் அரசியல்ரீதியாக ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உண்டு. தமிழகத்தின் நலனுக்காக செயத்தக்கவையை செய்யாமைக்காகவும், செயத்தக்க அல்லவற்றை செய்தமைக்காகவும் கருணாநிதி நான் பலமுறை உரிமையுடன் விமர்சித்திருக்கிறேன்.

அந்த விமர்சனங்களை கருணாநிதி ரசித்து இருக்கிறாரே தவிர, ஒருபோதும் வெறுத்தது கிடையாது. அதேநேரத்தில் தமிழகத்திற்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்டதில் தந்தைப் பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் வழியின் கருணாநிதி செய்த பங்களிப்பை ஒருபோதும் நான் மறுத்ததில்லை; அதை எவரும் மறுக்கவும் முடியாது, என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டப்பேரவை வைரவிழா காணும் கலைஞர் பொதுவாழ்வில் நூற்றாண்டு காணட்டும்! என்றும் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

English summary
PMK founder Dr.Ramadoss wishes Karunanidhi and also reminds his time with the veterian politician that he welcome all the criticisms rather avoiding it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X