திராவிடம் இந்தியாவுக்கே சொந்தமானது.. நாடே இதை மனதில் நிலைநிறுத்த வேண்டும்: கமல் தடாலடி #Murasoli75

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திராவிடம் என்பது மொத்த இந்தியாவுக்கும் சொந்தமானது என்பதை மொத்த நாடும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அழுத்தமாக தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.

முரசொலி பவள விழா வாழ்த்தரங்கத்தில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர்தான் நிறைவுரையாற்றினார். அவர் பேசுகையில், திராவிடம் இத்தோடு முடிந்தது என சிலர் பேசுகிறார்கள். ஆனால் நான் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியதை போல தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் இருக்கும் வரை திராவிடமும் இருக்கும்.

Dravidian ideology is pan-Indian movement: Kamal Haasan

திராவிடம் என்பது தமிழகம், தென்னகத்தோடு நிற்கவில்லை. திராவிடம் என்பது நாடு தழுவியது. சிந்து சமவெளி நாகரீகம் தொடங்கி தமிழகம் வரை வந்தது திராவிடம். திராவிடம் என்பது மொத்த இந்தியாவுக்கும் சொந்தமானது. இதை மொத்த நாடும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கமல் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dravidian ideology is pan-Indian movement, entire nation will keep it in mind, says actor Kamal Haasan at Murasoli function.
Please Wait while comments are loading...