குடிகாரர்கள் அட்டகாசம்.. பெண்கள் மீது மோதுகிறார்கள், வேட்டி இல்லாமல் நடக்கிறார்கள்!
மதுரை: மதுரை, அவனியாபுரம் பகுதியில் குடிகாரர்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று பெண்கள் குமுறுகிறார்கள். அதிலும் செம்மண்ணூரணி பகுதியில் ஒரே தெருவில் இரண்டு கடைகளையும், பார்களையும் வைத்துள்ளதால் குடிகாரர்கள் தொல்லை தாங்க முடியவில்லை என்று அங்கு வசிப்போர் வேதனை தெரிவிக்கின்றனர்.
குடித்து விட்டு போதையில் நடப்பது, தெருவில் செல்லும் பெண்கள் மீது மோதுவது, வேட்டி கழன்றது கூட தெரியாமல் போவது, ஆங்காங்கே விழுந்து கிடப்பது என்று குடிகாரர்கள் தொல்லை தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக மக்கள் குமுறுகிறார்கள்.

அவனியாபுரம் பிரசன்னா காலனி பூந்தோட்ட நகர், பாரதியார் தெரு, இமானுவேல் நகர், வள்ளானந்தபுரம் ஆகிய பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் செம்மண்ணூரணி வழியாக வந்துதான் அவனியாபுரம் பஸ் நிலையத்திற்கு வரவேண்டும்.
காலை, மாலை நேரங்களில் கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளும் மதுரைக்கு சென்று வருகின்றனர். இந்த தெருவில் 2 டாஸ்மாக் பார்களை இணைத்து பிரமாண்ட பார்களாக்கியுள்ளனர். இதனால் குடிகாரர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
குடித்து விட்டு போதையில் ரோட்டில் தள்ளாடி வரும்போது நடந்து செல்லும் பெண்கள் மீது மோதி விடுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்பவர்களும் பொதுமக்களை இடித்து விட்டு செல்கின்றனர். வேட்டி இல்லாமல் நிர்வாண நிலையில் போதையில் விழுந்து கிடக்கிறார்கள் பலர். அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில் பிணங்கள் ஆங்காங்கு கிடப்பது போல பலர் மயங்கி போய் ஆங்காங்கு விழுந்து கிடக்கின்றனர்.
இதனால் அந்தத் தெருவே அலங்கோலமாக படு பரிதாபமாக உள்ளது. பெண்கள் நடந்து போகக் கூட அஞ்சும் நிலை உள்ளது. மீறி வெளியே போகும் பெண்களை குடிகார்ரகள் கிண்டல் செய்வதும் நடக்கிறது. உடனடியாக இந்தக் கடை மற்றும் பார்களை அங்கிருந்து தூக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications