For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மது விற்க ஆர்வம் காட்டியதே தமிழக பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்: ராமதாஸ் குற்றச்சாட்டு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: இந்திய மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிப் பட்டியலில் தமிழகம் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் 2012-13 ஆம் ஆண்டில் எட்டிய பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களை மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகப் பொருளாதார வளர்ச்சி குறித்த தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. பின்தங்கிய மாநிலமாக கருதப்படும் பிகார் 10.73% வளர்ச்சியுடன் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு வெறும் 3.39% பொருளாதார வளர்ச்சியுடன் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

ramadoss

தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தரப்போவதாகக் கூறித் தான் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். அதன்பின் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொலைநோக்குத் திட்டம் &2023 ஆவணத்தை வெளியிட்டு பேசிய ஜெயலலிதா, தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்குவதே தமது லட்சியம் என்றும், அதற்காகவே திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஜெயலலிதா வகுத்து செயல்படுத்திய திட்டங்கள் தமிழகத்தை எந்த அளவுக்கு முன்னேற்றியுள்ளன என்பதற்கு பொருளாதார வளர்ச்சி குறித்த இந்த விவரங்கள் தான் சாட்சியாகும்.

கடந்த 5 ஆண்டுகளாகவே பிகார் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிவருகிறது. மற்ற பின்தங்கிய மாநிலங்களான மத்தியப்பிரதேசம் 9.89% வளர்ச்சியுடன் இரண்டாவது இடத்தையும், ஒடிசா 8.09% வளர்ச்சியுடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஜார்க்கண்ட் 7ஆவது இடத்தையும், மேற்குவங்கம் 8 ஆவது இடத்தையும் கைப்பற்றியுள்ளன. அண்டை மாநிலமான கேரளம் 8.24% வளர்ச்சியுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

ஆனால், தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது. தேசிய சராசரி பொருளாதார வளர்ச்சி 4.5% ஆக உள்ள நிலையில் அதைக்கூட எட்ட முடியாமல் 3.39% வளர்ச்சியுடன் தமிழகம் முடங்கி விட்டது. தேசிய சராசரிக்கும் குறைவான வளர்ச்சியை எட்டிய இரு மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்பது அவமானத்திற்குரிய விஷயமாகும்.

ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் மட்டுமின்றி, வேளாண் துறையில் மைனஸ் 12.9% வளர்ச்சி, தொழில் உற்பத்தித் துறையில் மைனஸ் 1.3% வளர்ச்சி என தமிழகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறது.

பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் பிடிக்கும் நோக்குடன் மற்ற மாநிலங்கள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்க தமிழகமோ ஆண்டுக்கு ரூ.40,000 கோடிக்கு மது விற்பனை, ரூ.1.78 லட்சம் கோடி கடன்சுமை, சுமார் 95 லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என துயரம் மிகுந்த திசையில் முதலிடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

English summary
Pmk founder Ramadoss criticise state government for economic slow down.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X