அதிமுக அலுவலகம், ஜெயா டிவி, ‘நமது எம்ஜிஆர்’.. அனைத்தையும் கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி பலே திட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அதிமுகவில் இருந்து தினகரன் குடும்பம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்த பின்னர் தமிழக அரசியலில் மேலும் பதற்றம் தொற்றிக் கொண்டது.

இதனையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரனுக்கு எதிராக பல்வேறு ரகசிய திட்டங்களை உருவாக்கியுள்ளதாகவும் அதில் முதல் கட்டமாக அதிமுக கட்சி அலுவலகத்தை கைப்பற்றப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ள அதிமுக அம்மா கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டத்திற்கு தினகரனை வரவிடாமல் செய்ய திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைமை அலுவலகம்

தலைமை அலுவலகம்

அமைச்சர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்தும் தினகரன் குடும்பத்தை ஒதுக்கியும் அறிவித்துள்ள நிலையில், அதிமுக கட்சி அலுவலகத்தை கைப்பற்றும் திட்டத்தையும் எடப்பாடி பழனிச்சாமி தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் உள்ள பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

தினகரன் நுழையத் தடை

தினகரன் நுழையத் தடை

இன்று பிற்பகல் 3 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ள டிடிவி தினகரன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வரும் போது அவரை நுழைய விடக் கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி போலீசாருக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

போலீசார் குவிப்பு

போலீசார் குவிப்பு

அதிமுகவில் இப்படி ஒரு அசாதாரண சூழல் நிலவி வருவதாலும், தினகரனை அதிமுக அலுவலகத்தில் நுழைய விடாமல் தடுக்கும் போது ஏற்படும் பதற்றத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் சாலை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக அலுவலகம் முன்பு போலீசாரின் பிரத்யேக பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைமை அலுவலகத்திற்கு சீல்

தலைமை அலுவலகத்திற்கு சீல்

அதிமுக அலுவலகத்தில் தொடர்ந்து பிரச்சனை ஏற்பாட்டால் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம் ஜெயலலிதாவில் கட்டிடமாக எழுப்பப்பட்டது. அந்த அலுவலகத்திற்கு தற்போது சீல் வைக்கும் ஏற்பாட்டை அந்தக் கட்சியினரே மேற்கொண்டுள்ளனர் என்பதுதான் சோகம்.

ஜெயா டிவி

ஜெயா டிவி

தலைமை அலுவலகத்தை கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி அணி திட்டம் தீட்டி இருப்பது போன்றே, ஜெயா டிவி மற்றும் கட்சிப் பத்திரிகையான ‘நமது எம்ஜிஆர்' ஆகியவற்றை கைப்பற்றவும் ரகசிய திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவின் உள்கட்சி பூசலால் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதோ இல்லை நல்ல நாடகம் நடந்து வருவதை பொதுமக்கள் சளிப்போடு பார்த்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CM Edapadi Palanisamy team has planned to capture ADMK head office.
Please Wait while comments are loading...