For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 வருஷமாச்சு... இன்று விழுந்துரும்.. நாளை கவுந்துரும்.. டரியல் ஆக்கிய எடப்பாடியார்.. தில்லுதான்!

4-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் முதல்வர் எடப்பாடியார்!

Google Oneindia Tamil News

சென்னை: இன்னைக்கு அரசு கவிழும், நாளைக்குள்ள நிச்சயம் கவிழ்ந்துவிடும் என்று கெடு விதிக்கப்பட்ட நிலையில், வெற்றிகரமாக 4வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் நம் முதல்வர்.. "நல்ல முதல்வர்" என்று சொல்வதைவிட, "பரவாயில்லை" என்ற கேட்டகிரிக்குள்ளும் வந்துவிட்டார் எடப்பாடியார்!

ஜெயலலிதா மறைந்த சமயம்.. மிக மிக மோசமான அரசியல் சூழல், பதற்றத்தில்தான் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார்.. இந்த 3 ஆண்டுகள் அவருக்கு பல அனுபவங்களை தந்திருக்கும்... சில நல்ல விஷயங்கள் நாமும் கவனித்து வந்துள்ளோம்.

அதன்படி பார்த்தால் முதலாவதாக, கெடுபிடி இல்லாத முதல்வராக இருக்கிறார் எடப்பாடி.. எளிமையான முதல்வராக இருப்பது அடுத்த பிளஸ்.. அதனால் மக்கள் இவரிடம் நெருங்குவது என்பது இயல்பாக இருக்கிறது. எந்த நேரமும் முதல்வர் ஆபிசுக்குள் பொதுமக்கள் செல்லலாம் என்ற நிலையை அணுகுமுறையை வைத்துள்ளார் முதல்வர்.

சகாயம் சாத்தியமா... இவ்ளோ சான்ஸ் இருக்கே.. தில்லா இறங்கினால்.. தமிழகத்தின் கெஜ்ரிவால் இவர்தான்! சகாயம் சாத்தியமா... இவ்ளோ சான்ஸ் இருக்கே.. தில்லா இறங்கினால்.. தமிழகத்தின் கெஜ்ரிவால் இவர்தான்!

பிளாஸ்டிக் ஒழிப்பு

பிளாஸ்டிக் ஒழிப்பு

அடுத்ததாக, ஏராளமான வளர்ச்சிப் பணிகள் தொடர்பான கோப்புகளுக்கு கையெழுத்திட்டுள்ளர்.. மேலும் இதனால் கோரிக்கை தொடர்பாகவும் கையெழுத்துகளை போட்டு, அப்பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டுள்ளது நல்ல விஷயமாகும்! முக்கியமாக பிளாஸ்டிக் சமாச்சாரத்தை ஒழித்ததை பாராட்டாமல் இருகக் முடியவில்லை.

புகைச்சல்

புகைச்சல்

அதேபோல, கட்சிக்குள் என்னதான் புகைச்சல் இருந்தாலும், இரட்டை தலைமை என்ற விமர்சனம் எழுந்து அடங்கியபோதிலும், பிளவு என்று இல்லாமல் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்துள்ளது அடுத்த பிளஸ் ஆகும்.. ஒரு மாவட்ட செயலாளர் முதல் எம்எல்ஏ வரை முதல்வரிடம் தங்கள் கருத்துக்களை தைரியமாக எடுத்து வைப்பது நல்ல முன்னேற்றம்.. இது ஜெயலலிதா இருந்தபோதுகூட இருந்தது கிடையாது.

நிறைகள்

நிறைகள்

அதே சமயம் குறை என்று எதுவுமே இல்லை என சொல்லிவிட முடியாது.. சொல்லப்போனால் நிறைகளை விட குறைகளே அதிகம் உள்ளது... சென்னையில் தண்ணீர் பஞ்சம் என்பது நாட்டையே உலுக்கிவிட்ட சமாச்சாரம்.. சரியான முன்னெச்சரிக்கை இல்லாமல், மக்கள் பட்ட கஷ்டம் அதிருப்தியை தந்துவிட்டது. இது டெல்லி பார்லிமெண்ட் வரை எதிரொலிக்கவும் செய்தது.

8 வழிச்சாலை

8 வழிச்சாலை

அடுத்ததாக, விவசாயிகள் பிரச்சனை... தன்னை ஒரு விவசாயி என்று பலமுறை சொல்லி கொள்ளம் முதல்வர், நம் விவசாயிகளினால்தான் பெருமளவு அதிருப்தியை சம்பாதித்து உள்ளார். என்பதே உண்மை.. அது ஹைட்ரோ கார்பன் முதல் ஸ்டெர்லைட் விவகாரம் வரை வெடித்து கிளம்பி விட்டனர்.. எல்லாவற்றிற்கும் மேலாக சேலம் 8 வழி சாலையில் அவரது நிலைப்பாடு இன்னும் தெளிவில்லாமல், அதே நேரம் விவசாயிகளக்கு ஆறுதல் தராமலேயே உள்ளது..

வண்ணாரப்பேட்டை

வண்ணாரப்பேட்டை

இது எல்லாவற்றிற்கும் மேலாக மத்திய அரசின் பிடிவாதமான நீட் தேர்வு முதல், இன்றுவரை வண்ணாரப்பேட்டை வரை உலுக்கி கொண்டிருக்கும் தேசிய குடியுரிமை சட்ட திருத்தம் முதல் செவிசாய்த்து கொண்டிருப்பது வேதனையாகவே பார்க்கப்படுகிறது.. இதற்கு நடுவில் சொல்ல சொல்ல கேட்காமல், ராஜேந்திர பாலா4 உள்ளிட்ட அமைச்சர்களின் பேச்சுக்கள், சர்ச்சைகள், இவையெல்லாம் எடப்பாடி தலைமையை சோதிப்பதாகவே அமைந்துள்ளன.

வாக்கு சதவீதம்

வாக்கு சதவீதம்

இப்போது 4வது ஆண்டில் முதல்வராக அடியெடுத்து வைக்கிறார்.. அந்த வகையில், நாமும் ஒரு கருத்து கணிப்பினை நம் வாசகர்களிடம் நடத்தினோம்.. " நல்ல முதல்வர்" என்ற ஆப்ஷனுக்கு 22.97 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். "எதிர்பார்த்த அளவுக்கு இல்லை" என்று 35.73 சதவீதம் பேரும், "பரவாயில்லை" என்று 21.56 சதவீதம் பேரும், "இன்னும் நிறைய செய்திருக்கலாம்" என்று 19.74 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

தில் முதல்வர்

தில் முதல்வர்

இந்த கணிப்புபடி பார்த்தால், "எதிர்பார்த்த அளவுக்கு இல்லை" என்ற 35.73 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.. அப்படியானால் எடப்பாடியாரை மக்கள் அதிக அளவுக்கு நம்பியிருந்திருக்கின்றனர்.. இப்போதும் நம்பியே உள்ளனர் என்றும் தெரிய வருகிறது.. அதை நிச்சயம் இந்த 4-ம் வருடத்தில் எடப்பாடியார் பூர்த்தி செய்து விடுவார் என்றே நம்புவோம்.. ஆனால் இதோ கவிழும் ஆட்சி பூச்சாண்டி காட்டி கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் துணிந்து நிற்கிறார் எடப்பாடி... இதுதான் தில்!

English summary
edapadi palaniswamy completed three years cm post and enters inton 4th year
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X