முதல்வர் எடப்பாடியை சிரிக்க வைத்தால் 10,000 ரூபாய் பரிசாம்.. ஓபிஎஸ் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை யாராவது சிரிக்க வைத்தால் 10,000 ரூபாய் பரிசு தருவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

திருவாரூரில் தெற்கு வீதியில் ஓபிஎஸ் அணி சார்பில் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடந்தது.
இதில் கலந்துக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: கட்சியும் ஆட்சியும் சசிகலாவின் குடும்பத்தினரிடம் சிக்கி தவிக்கிறது.

 Edappadi palanisamy heading benami government, says OPS

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளியே கொண்டு வர வேண்டும். அதற்காக நீதி விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமியும், ஸ்டாலினும் புதிய கூட்டணியை உருவாக்கி மக்களை ஏமாற்றி வருகின்றனர். தற்போதைய பழனிச்சாமி ஆட்சி பினாமி ஆட்சியாக செயலாற்றி வருகிறது என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், சட்டசபையிலோ, வெளியிலோ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிரித்து பேசி பார்த்ததில்லை, அவரை சிரிக்க வைத்தால் 10,000 ரூபாய் பரிசி தருவதாக நகைச்சுவையாக கூறினார். மேலும் என்னிடம் பேட்டிக்கேட்கும் நிருபர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் பேட்டி ஏன் கேட்பதில்லை, அப்படி கேட்டாலூம் அவர் பேசமாட்டார் என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu chief minister Edappadi palanisamy heading benami government, says OPS.
Please Wait while comments are loading...