For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஜி67" விவகாரம்:.. கார்த்தி சிதம்பரத்துக்கு விளக்கம் கோரி நோட்டீஸ்- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Google Oneindia Tamil News

சென்னை : கட்சி மேலிட அனுமதி பெறாமல் தனது ஆதரவாளர்களுடன் கார்த்தி சிதம்பரம் ஆலோசனை நடத்தியது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதற்கு உரிய விளக்கம் அளிக்காத பட்சத்தில் கார்த்தி சிதம்பரம் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப் படுவார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் பெருந்தலைவர் காமராஜர் பற்றி விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கினார் கார்த்தி சிதம்பரம். ‘‘காமராஜர் பற்றி பேசாவிட்டால் காங்கிரஸ் இல்லை'' என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி கொடுத்தார். கார்த்தி சிதம்பரம் பேச்சுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்களும் நடந்தன.

EVKS slaps showcause notice on Karti Chidambaram

இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் தனது தலைமையை முன்னிலைப்படுத்தும் வகையில் ‘ஜி67' என்ற பெயரில் காங்கிரஸ் தொண்டர்களை ஒன்று சேர்க்கும் புதிய அமைப்பை தொடங்கி இருக்கிறார்.

காங்கிரஸ் ஆட்சி முடிவடைந்த நிலையில் 1967-க்குப்பிறகு பிறந்தவர்கள் மட்டும் இதில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த அமைப்புக்கான ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை ஆந்திரா கிளப்பில் நடைபெற்றது.

கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்துக்கு, தொகுதிக்கு ஒருவர் வீதம் 234 பேர் வரவழைக்கப்பட்டிருந்தனர். அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களுடன் கார்த்தி சிதம்பரம் கலந்துரையாடினார்.

அப்போது ‘‘மதசார்பற்ற கட்சி என்று சொல்வதால் மட்டும் தமிழ்நாட்டில் காங்கிரசை வளர்த்து விட முடியாது. தமிழக மக்களிடம் பிரபலமானவரை முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க வேண்டும். சினிமா உலகை சேர்ந்தவர்கள் பின்னால் செல்வதை தவிர்க்க வேண்டும் என கட்சியின் நடவடிக்கைகளை கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்ததாகத் தெரிகிறது.

இது தொடர்பாக வந்த புகார்களை அடுத்து தக்க நடவடிக்கை எடுக்கப் படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

இந்நிலையில், சுபாஷ் சந்திரபோஸ் 109-வது பிறந்த நாளையொட்டி, இன்று சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன், மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம் மற்றும் சிரஞ்சீவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். அப்போது அவர் கூறியதாவது :-

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் ஒரு போட்டி கூட்டம் நடத்தி இருக்கிறார். அதில் கட்சி பற்றி விமர்சனம் செய்துள்ளார். காமராஜர் பற்றி பேசுவதால் எந்தவித பயனும் இல்லை என்றும் கூறி இருக்கிறார்.

கார்த்தி சிதம்பரத்தின் இந்த கட்சி விரோத நடவடிக்கை குறித்தும் காங்கிரசுக்கு எதிராக பேசியது பற்றியும் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டது ஏன்? உங்களை ஏன் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது? என்று விளக்கம் கேட்கப்பட்டு இருக்கிறது.

இந்த நோட்டீசுக்கு கார்த்தி சிதம்பரம் ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் காங்கிரசில் இருந்து நீக்கப்படுவார்.

கேள்வி:- தொலைபேசி இணைப்பு விவகாரம் தொடர்பாக தயாநிதி மாறனின் முன்னாள் உதவியாளர் உள்பட 3 பேரை சி.பி.ஐ. கைது செய்து இருக்கிறதே?

பதில்:- இந்த வழக்கு தொடர்பாக தொலைக்காட்சி ஊழியர்களை கைது செய்து இருப்பது சரியல்ல. வழக்கு விசாரணை முடிந்த பிறகுதான் குற்றவாளி யார் என்பது தெரியும்.

கே:- சி.பி.ஐ. மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?

ப:- தற்போது மத்திய அரசின் கைபாவையாக சி.பி.ஐ. செயல்படுவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

English summary
"If Karthi Chidambaram doesn't gives explanation on conductinng seperate meeting, then he will be dismissed from the party", said E.V.K.S.Elangovan, the president of Tamilnadu congress committee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X