For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் விதிமீறல்கள்: புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் புகார் மையம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்கள், விதிமீறல்கள் குறித்த புகார்களை பெற 24 மணிநேரமும் இயங்கும் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது என மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நியாயமாகவம், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடப்பதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த உள்ளாட்சித் தேர்தல் அடுத்து வரும் தேர்தல்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைய பல்வேறு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 Election Commission to set up 24-hour call centres

நடைமுறையில் உள்ள மாதிரி நன்னடத்தை விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படுகிறது. மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தரைதளத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை பெற, அலுவல் மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட 24 மணி நேரமும் இயங்கும் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக இலவச அழைப்பு அடிப்படையிலான, 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 ஆகிய தொலைபேசி எண்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 044-2363 5011, 044- 2363 5010 ஆகிய வரவேற்பு எண்கள், 044- 2363 1014, 1024,1074 ஆகிய நிகரி (பேக்ஸ்) எண்களிலும் தங்கள் புகார்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Election Commission to set up 24-hour call centres in tamilnadu local body elections 2016
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X