ஆர்கே.நகரில் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? என்ன சொல்கிறார் ராஜேஷ் லக்கானி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலைச்சின்னத்தை யாருக்கு வழங்குவது என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். மேலும் வாக்களித்த ஒப்புகை சீட்டை வழங்குவது குறித்தும் தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும் என்றும் லக்கானி கூறியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்கே.நகர்.தொகுதியில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் சசிகலா தரப்பு அதிமுக, ஓபிஎஸ் தரப்பு அதிமுக, திமுக, தேமுதிக, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை உள்ளிட்டக் கட்சிகள் போட்டியிட உள்ளன.

இதில் எம்ஜிஆர் காலம் முதலே பதிவான இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிடவே சசிகலா தரப்பு அதிமுகவும், ஓபிஎஸ் தரப்பு அதிமுகவும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். கட்சிப் பொறுப்பு யாரிடம் உள்ளதோ அவர்களே இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட முடியும்.

தேர்தல் ஆணையத்தில் விசாரணை

தேர்தல் ஆணையத்தில் விசாரணை

இந்நிலையில் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என ஓபிஎஸ் தரப்பு அதிமுகவில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

சசிகலாவுக்கு எதிராகவே முடிவு

சசிகலாவுக்கு எதிராகவே முடிவு

இந்த விசாரணையில் முன் வைக்கப்படும் வாதங்கள் மற்றும் அதிமுகவின் சட்டவிதிகள் அனைத்தும் சசிகலாவுக்கு எதிராகவே முடிவு வரும் தெரிவிக்கிறது. இதனால் அவர் நியமித்த பொறுப்புகள் செல்லாததாகும் நிலையில் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளின் கைகளுக்கே கட்சியும் சின்னமும் செல்லும் எனத் தெரிகிறது.

ஓபிஎஸிடம் செல்லுமா கட்சி?

ஓபிஎஸிடம் செல்லுமா கட்சி?

பொதுச்செயலாளருக்கு அடுத்து பொருளாளரே அதிகாரத்துக்குரியவர் என்பதால் அதிமுக, ஜெ.வால் நியமிக்கப்பட்ட பொருளாளரான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடமே செல்லும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரவித்துள்ளார்.

இரட்டை இலைச்சின்னம் யாருக்கு?

இரட்டை இலைச்சின்னம் யாருக்கு?

இரட்டை இலைச்சின்னத்தை யாருக்கு வழங்குவது என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். மேலும் வாக்களித்த ஒப்புகை சீட்டை வழங்குவது குறித்தும் தேர்தல் ஆணையமே முடிவெடும் என்றும் லக்கானி கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu Chief Election Commissioner Rajesh lakkani said that election commission will decide to whom they have to give the double leaf symbol.
Please Wait while comments are loading...