லஞ்ச பேர வீடியோ.. எப்படித்தான் சமாளிப்பது.. அமைச்சர்கள் எம்எல்ஏக்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த சந்திப்பில் தினகரன் ஆதரிக்கும் 34 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Emergency ADMK MLA meeting holds with CM

இதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெறுகிறது.

சட்டசபைக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான திமுக சரவணன் எம்எல்ஏ வீடியோ விவகாரத்தை தொடர்ந்து எழுப்பி வருகிறது. அதனை எப்படி சமாளிப்பது என்று விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள பல அமைச்சர்களும், எம்எல்ஏக்களும், டிடிவி தினகரனை ரகசியமாக நேரில் சென்று பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிர்ச்சி அடைந்துள்ள பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்பார் என்றும் தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Emergency ADMK MLA meeting will be held after 5 pm today at ADMK head office in Royapettah.
Please Wait while comments are loading...