For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொறியியல், மருத்துவ மாணவர்கள் கவனத்திற்கு... குறைகிறது கட் ஆஃப் மார்க்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உருவாகி உள்ளது.

பொறியியல் படிப்பில் சேர கணிதம், இயற்பியல், வேதியல் ஆகிய பாடங்களின் மதிப்பெண்களை கணக்கிடுவது நடைமுறை. இந்த ஆண்டு கணிதப்பாடத்தில் 9710 பேர் 200க்கு 200 மதிப்பெண்களை எடுத்து உள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு 3882 பேர் மட்டுமே 200 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

Engineering Medical cutoff mark reduced

எனவே பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் 0.5 அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதே நேரத்தில் மருத்துவ படிப்புக்கான உயிரியல் தேர்வில் 387 பேரும், வேதியியல் தேர்வில் 1049 பேரும் 200 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவு ஆகும்.

இதனால் மருத்துவ படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் 0.5 குறைய வாய்ப்பு உள்ளதாக கல்வித்துறை வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன.

English summary
Engineering Medical cutoff mark reduced
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X