கிணறு விசயத்தில் வார்த்தை தவறிவிட்டரா ஒபிஎஸ்...? லட்சுமிபுரத்தில் பதற்றம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: முன்னாள் முதல்வர் தனக்கு சொந்தமான கிணற்றை ஊர்பொதுமக்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கிறேன் என கூறி அதை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டதால் லட்சுமிபுரத்தில் மோதல் உண்டாகி பதற்றம் நிலவுகிறது.

தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சுக்கு சொந்தமாக நிலமும் ராட்சத கிணறுகளும் உள்ளன. இந்த ராட்சத கிணற்றில் அதிக திறன்கொண்ட மோட்டர்களை வைத்து நீர் இறைப்பதால் பொதுமக்களுக்கு குடிக்க நீர் கிடைக்கவில்லை என கூறி ஊர் கூட்டத்தில் புகார் கூறப்பட்டது. மேலும், மக்கள் காலி குடங்களை வைத்து போரட்டம் நடத்தினர்.

Clash Between OPS Supporter And Villagers-Oneindia Tamil

அதையடுத்து, பலமுறை ஒபிஎஸ் ஆதரவளர்களுக்கும் ஊர்பொதுமக்களுக்கும் இடையே லட்சுமிபுரம் கிராம கூட்டத்தில் மோதல் உருவானது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கிணற்றை பொதுமக்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதாக ஓபிஎஸ் அறிவித்தார்.

இந்நிலையில் ஓபிஎஸ் மனைவியின் பெயரில் இருந்த நிலத்தையும் கிணற்றையும் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவருக்கு விற்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் லட்சுமிபுரத்தில் கிராமக் கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் ஊர்பொதுமக்களுக்குமிடையே மோதல் உருவானது. சொன்ன சொல்லைக் காப்பாற்றாமல் ஓபிஎஸ் ஏமாற்றிவிட்டதாக அவ்வூர் பொதுமக்கள் மிகுந்த ஆதங்கத்துடன் கூறினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Theni Lakshmipuram ex cm O.Panneer selvam did not give well as he promised. So tense situation prevails in Lakshmipuram.
Please Wait while comments are loading...