முன்னாள் அமைச்சர் ஈரோடு சு.முத்துசாமியின் மனைவி காலமானார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோட்டைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் முத்துசாமியின் மனைவி ஜெயலட்சுமி வயோதிக பிரச்சினைகளால் இன்று காலமானார்.

ஈரோட்டைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதவின் அமைச்சரவையில் முக்கிய பதவிகளை வகித்தவர். அதிமுக மூத்த தலைவர்களில் ஒன்றாக விளங்கியவரும் ஆவார்.

EX Minister Erode Muthusamys wife passed away

இவரது செல்வாக்கு ஈரோட்டு மாவட்டத்தில் கொடி கட்டி பறந்தது. இந்நிலையில் அவரது மனைவி ஜெயலட்சுமி வயோதிக குறைபாடுகளால் இன்று சென்னையில் உயிரிழந்துவிட்டார்.

அவரது உடல் பொதுமக்கள், உற்றார், உறவினர் அஞ்சலிக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முத்துசாமியின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ex Minister Erode Muthusamy's wife passed away due to age related issues.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற