For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

110 இடத்திற்கு மேல் பாஜக பெறும் என சொன்ன எக்ஸிட் போல்கள்... கள நிலவரம் இப்படியாயிடுச்சே!

குஜராத் தேர்தலில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கும் விதமாக பாஜக வெற்றிக்கான போராட்டத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    கருத்து கணிப்புகளின் படி இல்லாமல் 99 சீட்டுகளுக்கே திணறும் பாஜக- வீடியோ

    சென்னை: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக 111 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தெரிவித்தன. ஆனால் தேர்தல் முடிவுகளின் படி பாஜக 110 இடங்களை பிடிக்கும் என்றே தெரிகிறது.

    குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதி இது தான் தேர்தல் நடந்து முடிந்த 14ம் தேதி மாலையில் தேசிய ஊடகங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள். பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜக 104 முதல் 135 இடங்கள் வரை வெல்லும் என்று கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருந்தன.

    டைம்ஸ் ஆப் இந்தியா ஆன்லைன் சி வோட்டர் இணைந்து நடத்திய சர்வேயில் பாஜக 111 இடங்களிலும் காங்கிரஸ் 71 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. இதே போன்று டைம்ஸ் நவ் சேனல் மற்றும் விஎம்ஆர் இணைந்து நடத்திய சர்வேயில் பாஜக 113 இடங்களிலும், காங்கிரஸ் 66 இடங்களிலும், இதர கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறி இருந்தது.

    பல்வேறு விதமான எக்ஸிட் போல்கள்

    பல்வேறு விதமான எக்ஸிட் போல்கள்

    ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய சர்வேயில் பாஜக 106 இடங்களையும் காங்கிரஸ் 75 இடங்களையும் கைப்பற்றும் என்று கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருந்தது. டுடேஸ் சானக்யா தான் அதிகபட்சமாக பாஜக 135 இடங்களிலும் காங்கிரஸ் 47 இடங்களிலும் வெல்லும் என்றும் நியூஸ் நேஷன் பாஜக 131 இடங்களிலும் காங்கிரஸ் 49 இடங்களிலும் வெல்லும் என்று கணித்து முடிவுகளை வெளியிட்டிருந்தது.

    பாஜக 100, காங்கிரஸ் 76

    பாஜக 100, காங்கிரஸ் 76

    ஆனால் மாலை 5.15 நிலவரப்படி தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின் படி பாஜக 100 இடங்களில் வென்றுள்ளதாகவும், காங்கிரஸ் 76 இடங்களில் வென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், பாரதிய ட்ரைபல் கட்சி 2 இடத்திலும் சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்ட்சூரி அடித்த பாஜக

    சென்ட்சூரி அடித்த பாஜக

    முன்னிலை நிலவரத்தை பொறுத்தவரையில் பாஜக 20 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. தற்போதைய வெற்றி + முன்னிலை நிலவரத்தை ஒப்பிட்டு பார்த்தால் பாஜகவிற்கு 100 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 86 இடங்களுமே கிடைக்கின்றன.

    நினைத்த வெற்றியில்லை

    நினைத்த வெற்றியில்லை

    எனினும் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ், பாஜகவிடையேயான போட்டியானது தொடர்ந்து வருகிறது. ஒருவழியாக 5 மணிக்குப் பின்னர் பாஜக மல்லுகட்டி 100ஐக் கடந்துவிட்டது. இதனால் குஐராத்தில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியானாலும் அந்தக் கட்சி எதிர்பார்த்த வெற்றி இதுவல்ல என்பது தான் தேசிய அரசியலில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

    English summary
    Exit polls of various medias and the real polls of Gujarat People shows BJP is battling in the fort of BJP vigorously with congres to reach 100 + seats.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X