
பேஸ்புக்கில் காதல் வலை விரித்து பல பெண்களிடம் உல்லாசம்.. கூரியர் நிறுவன மானேஜர் கைது
சென்னை: சென்னையில் பேஸ்புக் மூலம் காதல் செய்து விமான பெண் ஊழியருடன் உல்லாசம் அனுபவித்து , திருமணத்திற்கு மறுத்த காதல் மன்னனை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அப்துல் ரசீப் (27). இவர் ரசீப் சென்னை புத்தேரியில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக ஊழியர் குடியிருப்பை சேர்ந்த 28 வயது பட்டதாரி பெண் ஒருவர் , தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி, தனியார் விமான நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

பேஸ்புக் காதல்
அப்துல் ரசீப்பும் , அந்த பெண்ணும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக் மூலம் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர். பின்னர் தினமும் பேஸ்புக் மூலம் பேசி வந்துள்ளனர்.

காதலாக மாறிய நட்பு
தொடர்ந்து பேசி வந்த இருவரின் நட்பும், நாளடைவில் காதலாக மாறியது. ஒரு ஆண்டுகளாக இருவரும் நேரடியாக சந்திக்காமல் பேஸ்புக் மூலமாகவே காதலித்து வந்துள்ளனர்.

முதல் சந்திப்பு
கடந்த ஒரு ஆண்டுக்கு முன் இருவரும் வேளச்சேரியில் உள்ள தனியார் ஷாப்பிங் மாலில் முதன்முறையாக சந்தித்துள்ளனர். பின்னர் இவர்கள் அடிக்கடி பல இடங்களில் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர்.

ஆசை வார்த்தை
இதற்கிடையே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி , அப்துல் ரசீப் பலமுறை அந்த பெண்ணிடம் கடந்து ஒரு ஆண்டுகளாக உல்லாசம் அனுபவித்து இருக்கிறார்.

திருமணம் செய்ய பெண் வீட்டில் முடிவு
இந்நிலையில் அந்த பெண்ணிற்கு , அவருடைய பெற்றோர் திருமண செய்ய முடிவு செய்தனர். இதனை அப்துல் ரசீப்பிடம் அந்த பெண் தெரிவித்துள்ளார். இதனால் ரசீப் அந்த பெண்ணிடம் இருந்து விலக ஆரம்பித்துள்ளார்.

ரசீப் மீது பெண் போலீசில் புகார்
இதனைத்தொடர்ந்து தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக , தகுந்த ஆதரங்களுடன் அந்த பெண், சென்னை மயிலாப்பூரில் உள்ள அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் கடந்த 16ம் தேதி புகார் அளித்துள்ளார். பின்னார் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை மாம்பாக்கத்தில் தங்கி இருந்த அப்துல் ரசீப்பை கைது செய்தனர்.

காதல் மன்னன் ஆசிப்
போலீசார் ரசீப்பை விசாரணை செய்த போது பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. ரசீப் பேஸ்புக் மூலம் பல பெண்களிடம் பழகி உல்லாசமாக இருந்துள்ளார் என்பது அம்பலமானது.

சிறையில் அடைப்பு
ஆசிப்பிடம் இருந்து செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்பின் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆசிப்பை ஆஜர்படுத்தி, காதல் மன்னன் அப்துல் ரசீப்பை புழல் சிறையில் அடைத்தனர்.