ஒரு வேளை தீபா இல்லாத நேரமா பார்த்து போலி அதிகாரியை மாதவனே வரசொல்லியிருப்பாரோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜெ.தீபா வீட்டுக்கு வந்த டுபாக்கூர் ஐடி அதிகாரி..வீடியோ

  சென்னை: தீபா வீட்டில் இல்லாத நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரி எனக்கூறி அவரது வீட்டிற்கு நபர் ஒருவர் வந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

  ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவின் வீட்டிற்கு இன்று காலை வந்த நபர் தன்னை வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி அடையாள அட்டையை காண்பித்துள்ளார்.

  ஆனால் அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட தீபாவின் வழக்கறிஞர் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

  ஓட்டம் பிடித்த அதிகாரி

  ஓட்டம் பிடித்த அதிகாரி

  இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரி என்று கூறிவந்த அந்த நபர் ஓட்டம் பிடித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  அடையாள அட்டை

  அடையாள அட்டை

  இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தீபாவின் கணவர் மாதவன் அந்த நபர் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றார். மேலும் அவர் அடையாள அட்டையை காண்பித்ததால் தான் உள்ளே அனுமதித்தேன் என்றும் அவர் கூறினார்.

  பணத்துடன் ஓட்டம்

  பணத்துடன் ஓட்டம்

  ஏற்கனவே தீபாவின் கணவர் மாதவன் தீபா வீட்டில் வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவானார். பின்னர் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

  பிரிந்திருந்த கணவன் மனைவி

  பிரிந்திருந்த கணவன் மனைவி

  இதனால் கணவன் மனைவிக்குள் பெரும் பிரச்சனை ஏற்பட்டு சில காலம் பிரிந்திருந்தனர். பின்னர் இருவரும் ஒன்றாக இணைந்தனர்.

  தீபா மீது மோசடி புகார்

  தீபா மீது மோசடி புகார்

  இதனிடையே தனது பேரவையில் பதவி தருவதாக கூறி தீபாவும் அவரது டிரைவர் ராஜாவும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக போலீஸில் புகார்கள் குவிந்து வருகின்றன.

  பல்வேறு சந்தேகங்கள்

  பல்வேறு சந்தேகங்கள்

  இந்நிலையில் தீபா வீட்டில் இல்லாத நேரத்தில் மாதவன் மட்டும் தனியாக இருந்தபோது தன்னை வருமான வரித்துறை அதிகாரி என கூறிக்கொண்டு வந்துள்ளார் அந்த நபர். இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Fake IT office arrived to Deepa's house when Deepa is not in the house. It crates many doubts among the public.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற