For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புது பொறுப்பில் மு.க.ஸ்டாலின்.. குடும்பத்தினர் முகங்களில் மகிழ்ச்சி + நிம்மதி!

திமுக தலைவர் ஸ்டாலினை ஆரத்தி எடுத்து குடும்பத்தினர் வரவேற்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: காலையில் கட்சியின் செயல்தலைவராக சென்று, மாலையில் தலைவராக பொறுப்பேற்று வீடு திரும்பிய ஸ்டாலினை குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்,

ஸ்டாலின் மீது குடும்பத்தாருக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதை கலந்த முக்கியத்துவம் உள்ளது. இளம் வயதிலிருந்தே தன்னை கட்சியில் ஈடுபட்டு கொண்டு கருணாநிதிக்கு துணையாகவும், கட்சிக்கு உரமாகவும் தன்னை இணைத்து கொண்டதை படிப்படியாக அருகில் இருந்து பார்த்தவர்கள் குடும்பத்தினர்கள்தான்.

 மகிழ்ச்சி எட்டி பார்க்கிறது

மகிழ்ச்சி எட்டி பார்க்கிறது

கருணாநிதி மறைவுக்கு பின் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக சோகங்களிலிருந்து தங்களை விடுவித்து கொண்டு வருகிறார்கள். கருணாநிதி இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாதுதான். அதேசமயம் குடும்பத்தார்களின் துக்கங்களை ஒரேயடியாக எடுத்துபோடவும் முடியாது. என்றாலும் ஸ்டாலினின் புதிய பொறுப்பு மூலம் அந்த குடும்பத்தில் தற்போது மகிழ்ச்சி எட்டி பார்த்துள்ளது.

 விபூதி வைத்து ஆசி

விபூதி வைத்து ஆசி

குடும்பத்தார்களின் முகங்களில் இழந்த ஒன்றை பெற்றது போன்ற ஒரு உணர்வு வெளிப்படுகிறது. இந்த மாற்றம் நேற்று முன்தினமே தென்பட தொடங்கிவிட்டது. திமுக தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கிளம்பிய ஸ்டாலினுக்கு தயாளு அம்மாள் விபூதி வைத்து ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார். அப்போது அங்கிருந்த துரைமுருகனுக்கும் விபூதி வைத்து ஆசி கூறி அனுப்பினார்.

 மலர் தூவி அஞ்சலி

மலர் தூவி அஞ்சலி

அதனையடுத்து இன்று காலை கட்சி தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து உரை நடத்திய ஸ்டாலின், கருணாநிதி நினைவிடம், அண்ணா நினைவிடம், பெரியார் திடம் ஆகிய இடங்களுக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

 ஆரத்தி எடுத்தனர்

ஆரத்தி எடுத்தனர்

இதனை தொடர்ந்து புதிய பொறுப்பு, பதவியுடன் வீட்டுக்கு சென்ற, ஸ்டாலினை அவரது குடும்ப உறுப்பினா்கள் உணா்ச்சி பொங்க வரவேற்றனா். ஸ்டாலினின் சகோதரி செல்வி குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் புடைசூழ, ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்றனர்.

 பறந்து போன சலசலப்புகள்

பறந்து போன சலசலப்புகள்

அழகிரிக்கு பொறுப்பு தரப்பட வேண்டும் என்ற பேச்சு சலசலப்பான ஒன்றாகவே இருந்து வந்தது. அதேபோல வேட்பு மனு தாக்கல் அன்றும் கனிமொழியை அழகிரிக்கு பொறுப்பு தரப்பட வேண்டும் என்ற பேச்சு சலசலப்பான ஒன்றாகவே இருந்து வந்தது. அதேபோல வேட்பு மனு தாக்கல் அன்றும் கனிமொழியை நிராகரிப்பது போன்ற ஒரு தோற்றமும் வந்து போனது. இதைத்தவிர துரைமுருகன் இல்லாமல் திமுக பொருளாளராக வேறு சிலரை குடும்பத்தார் சாய்ஸ் வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் நேர்மையான முறையில் நடைபெற்று, அதில் வெற்றியும் பெற்று தலைமை பொறுப்பை ஏற்று ஸ்டாலின் வீட்டுக்கு வந்தவுடன் அனைத்து சலசலப்புகளும் தடம் தெரியாமல் காணாமல் போய் சந்தோஷம் மட்டுமே நிறைந்து வழிந்தது! போன்ற ஒரு தோற்றமும் வந்து போனது. இதைத்தவிர துரைமுருகன் இல்லாமல் திமுக பொருளாளராக வேறு சிலரை குடும்பத்தார் சாய்ஸ் வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் நேர்மையான முறையில் நடைபெற்று, அதில் வெற்றியும் பெற்று தலைமை பொறுப்பை ஏற்று ஸ்டாலின் வீட்டுக்கு வந்தவுடன் அனைத்து சலசலப்புகளும் தடம் தெரியாமல் காணாமல் போய் சந்தோஷம் மட்டுமே நிறைந்து வழிந்தது!

English summary
Family members welcome dmk Newly DMk President Stalin at Residence
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X