தொடரும் சோகம்..பயிர் கருகியதால் தஞ்சை, உசிலம்பட்டியில் இரண்டு விவசாயிகள் மரணம்
பயிர் கருகியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மேலும் இரண்டு விவசாயிகள் மரணம் அடைந்தனர்.
தஞ்சாவூர்: டெல்டா பகுதியான தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பயிர் கருகியதைப் பார்த்த விவசாயி கணேசன் என்பவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தாம் பயிரிட்டிருந்த சோளப்பயிர் கருகியதால் மனமுடைந்த விவசாயி பாண்டி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே சின்னபொன்னாப்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன். இவர், 4 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் பயிரிட்டுள்ளார். வழக்கம் போல வயலுக்கு சென்றிருந்த போது, பயிர்கள் கருகி போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் சுருண்டு விழுந்து மரணமடைந்துள்ளார்.

தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதைக் கண்டு மனம் உடைந்த நிலையில் விவசாயி ஜெயக்குமார் இருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாண்டி என்வவர் 1 ஏக்கரில் பயிரிட்டிருந்த குதிரைவாலி, சோளம் கருகியதால் மனமுடைந்து இன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பருவமழை பொய்த்து போனதால், தமிழகத்தில் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை இல்லாததால் பயிர்கள் கருகுவதைப் பார்த்து அதிர்ச்சி அடையும் விவசாயிகள் தங்களது உயிர்களை மாய்த்துக்கொள்வது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications