நெல்லை அருகே சோகம்: கடன்தொல்லையால் தண்ணீரில் மின்சாரம் பாய்ச்சி விவசாயி தற்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே வங்கிக்கடனை திருப்பி செலுத்த முடியாத விவசாயி ஒருவர் தண்ணீரில் மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இட்டமொழி பகுதியை சேர்ந்தவர் முருகன் வயது 48. விவசாயியான இவர், தனது தோட்டத்தில் வாழை பயிரிட்டு இருந்தார். இதற்காக நெல்லையில் உள்ள ஒரு வங்கியில் ரூ.10 லட்சத்தை ஒரு வருடம் முன்பு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், வாழையில் சரிவர மகசூல் கிட்டாததால், கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனிடையே பணம் கேட்டு வங்கி நோட்டீசும் வந்துள்ளது.

Farmer suicides by credit risk in Nellai dist.

இதனால் மனம் உடைந்த முருகன், நேற்றுமுன்தினம் நள்ளிரவு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதற்காக அவர், தோட்டத்து வாய்க்காலில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் கம்பிகளை போட்டு வைத்து, அங்குள்ள மின்ஒயரை இணைத்து வாய்க்கால் தண்ணீரில் மின்சாரத்தை பாய்ச்சினார். பின்னர் அந்த மின்சாரம் பாய்ந்த தண்ணீரில் விழுந்தார்.

இதில் முருகன் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிந்தார். நேற்று காலை முருகனின் கருகிய உடலை பார்த்வர்கள் விஜயநாராயணம் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் முருகனின் உடல் கைப்பற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது மோட்டார் அறையை சோதனையிட்டபோது தற்கொலைக்கு முன்பு முருகன் எழுதிய ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் வங்கியில் ரூ.10 லட்சம் கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொள்வதாகவும் தாம் யாருக்கெல்லாம் கடன் கொடுக்க வேண்டும் என்றும் என்பதையும் முருகன் உருக்கமாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The farmer Murugan committed suicide by draining the water from the drain because he could not repay the loan in the bank. In which he was physically abducted. The informant Vijayanarayana police seized Murugan's body and investigated. The police seized a letter written by Murugan before suicide.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற