For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென்காசியில் விரைவு நீதிமன்றம் திறப்பு.. ஐகோர்ட் நீதிபதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைப்பு

தென்காசியில் விரைவு நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் நாகமுத்து, பார்த்திபன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

Google Oneindia Tamil News

தென்காசி: திருநெல்வேலியில் உள்ள தென்காசியில் விரைவு நீதிமன்றத்தை சென்னை ஐகோர்ட் நீதிபதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதனால் நெல்லையில் உள்ள விரைவு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய சிரமம் குறைந்துள்ளது.

Fast track court opens in

நெல்லை மாவட்டம் தென்காசியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதி மன்றம், சப் கோர்ட் ஆகிய 3 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள வழக்குக் கள் அனைத்தும் நெல்லையில் அமைந்துள்ள விரைவு நீதிமன்றம் செல்ல வேண்டும். இதன் காரணமாக ஏராளமான சுமைகளை வழக்கறிஞர்கள் சந்தித்து வந்ததனர்.

இந்நிலையில், தென்காசியில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து, தென்காசியில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு விரைவு நீதிமன்றம் அமைக்க அரசு உத்தரவு பிறப்பித்தது.

Fast track court opens in

இதனைத் தொடர்ந்து, தென்காசி புதிய பேருந்து நிலையத்தின் எதிரே உள்ள அரசு சமுதாய நலக் கூடத்தில் தென்காசிக்கான விரைவு நீதிமன்றம் அமைக்கப் பட்டுள்ளது. இதனை சென்னை ஐகோர்ட் நீதிபதி நாகமுத்து, பார்த்திபன் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் நெல்லை மாவட்ட காவல் துறை ஆய்வாளர் விக்ரமன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்.

English summary
Fast track court was opened in Thenkasi by Chennai High Court Judges Nagamuthu and Parthipan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X